வெள்ளி, மே 06, 2022

மே 5 : ஸாண்ட்விச்சும் குவாக்கமோலேயும் சாப்பிடும் அமெரிக்கா (இன்று கிழமை வியாழன்-4)


மே 5 : ஸாண்ட்விச்சும் குவாக்கமோலேயும்  சாப்பிடும் அமெரிக்கா 

(இன்று கிழமை வியாழன்-4)

அமெரிக்காவில் 24 ஆவது நாள் 

(அட்லாண்டிக் கடலோரம்)


தேசீய ஹாகி தினம்



மே மாதம் ஐந்தாம் தேதியை அமெரிக்காவில் - குறிப்பாக- பிலடெல்பியா நகரில்  தேசீய “ஹாகி”  -Hagie - அல்லது -Hoagie தினமாகக் கொண்டாடுகிறார்கள். 


உலக யுத்தத்தின்போது பிலடெல்பியாவின் கப்பல்காட்டும் தளமாக இருந்த   ஹாக்  (Hog) தீவில் 1953 வாக்கில் பணியில் இருந்த இத்தாலியர்கள், தங்கள் பகல் உணவிற்கு ஒரு புதிய உணவைத் தயாரித்து எடுத்துவந்தார்கள். இரண்டு ரொட்டித்துண்டுகளுக்கு நடுவில் சீஸ், லெட்டூஸ், மாமிசம் போன்றவற்றை வைத்து மூடி அவர்கள் செய்த உணவு வடிவத்திற்கு “ஸாண்ட்விச்” என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அது ஹாக் தீவில் இருந்து கிளம்பியதால் ‘ஹாகி’ ஸாண்ட்விச் அல்லது வெறுமனே “ஹாகீ” என்றே அழைக்கப்படலானது.  


1992இல் பிலடெல்பியா மேயராக இருந்த எட்வர்டு ரெண்டெல் “ஹாகீ”யை பிலடெல்பியாவின் “அதிகாரபூர்வ” ஸாண்ட்விச்சாக அறிவித்தார்! (பின்னாளில் அவர் பென்சில்வேனியா மாநிலத்தின் கவர்னராகவும் ஆனார். அதற்கு இந்த ஸாண்ட்விச் தான் காரணமா என்று தெரியவில்லை).        


(அமெரிக்காவில் எதைத்தான் அதிகாரபூர்வமான பொருளாக அறிவிக்காமல் இருப்பார்களோ அதுவும்  தெரியவில்லை!)


“ஸின்க்கோ -டி -மேயோ” திருநாள் 


மே  5ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் மக்களால் மட்டுமன்றி, ஸ்பானிஷ் மொழிபேசும் அனைவராலும்  கொண்டாடப்படும் நாள் “ஸின்க்கோ -டி -மேயோ” திருநாள் -அதாவது “மே 5 “ சுதந்திரத் திருநாள்.



உண்மையில் மெக்சிகோ நாட்டைவிட அமெரிக்க நாட்டில்தான் இது அதிக அளவில் கொண்டாடப்படுகிறது என்று தெரிகிறது. 1862 வாக்கில் நடந்த  அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட மெக்சிகன்    வம்சாவளியினர் தங்களின் விடுதலைக்கான திருநாளாக மே 5 -ஐ  தேர்ந்தெடுத்தார்களாம். ஏனென்றால் அதே ஆண்டில்  பியூபிளா என்ற இடத்தில் பிரெஞ்சுப்  படைகளை சிறிய மெக்சிகன் படை வெற்றிகண்டது அந்த மே  5ஆம் நாளில் தானாம்.  படிப்படியாக அது வெற்றித் திருநாள் என்பதிலிருந்து மாறி, மெக்சிகன் பண்பாட்டின் அடையாளமாக  ஆகிவிட்டதாம். 


 2005 இல் அமெரிக்க பாராளுமன்றம், இந்த நாளை உரிய கௌரவத்துடன் கொண்டாடவேண்டுமென்று ஜனாதிபதியை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று கோரியது. அதற்கேற்ப 150க்கும் மேற்பட்ட அதிகாரபூர்வ கொண்டாட்டங்கள் இந்த நாளில் நடத்தப்படுகின்றன.


மிக முக்கியமாக, மெக்சிகன் பாரம்பரிய உணவுகள் எங்கு பார்த்தாலும் விசேஷமாக விற்பனை செய்யப்படுகின்றன. வீடுகளிலும் அவரவர்கள் தயாரித்துக் கொண்டாடுகிறார்கள்.


எங்கள் பேரனுக்கு பேபிஸிட்டிங் செய்யும் பெரு நாட்டுப் பெண்மணி இன்று தானாகவே  முன்வந்து கோரிக்கைவைத்து மெக்சிகன் உணவான பாதாம் மாவிலிருந்து செய்யப்படும் “கேசடியா” (Quesadillas)வை, “குவாக்கமோலே” (guacamole) என்ற துவையல் மாதிரியான காரமில்லாத சட்னியுடன் எங்களுக்குச் செய்து தந்தார். சுவையாக இருந்தது. 


மனநிலை பிறழ்வை அவமதிப்பதை நிறுத்தும் நாள் 


தேசீய “Silence  the  Shame “ நாள் ஆகவும் மே 5ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. மனநிலை பிறழ்வு என்பது,  பிற நோய்களைப்  போலவே ஒரு நோய்தான், எனவே மனநிலை பிறழ்ந்தவர்களை அவமதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற விழிப்புணர்வை ஊட்டும் நாள் இது. 


இந்த மே  5ஆம் தேதிக்கு இன்னும் பல சிறப்புகள் உண்டு.


1893இல் இந்த நாளில்தான் அமெரிக்க பங்குச் சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.


1818இல் இந்த நாளில்தான் கம்யூனிசத்தின் பிதாமகரான கார்ல் மார்க்ஸ் பிறந்தார்.


1920இல் இந்த நாளில்தான் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. (உட்ரோ வில்சன் ஜனாதிபதி).


1821இல் இதே நாளில்தான்  நெப்போலியன் செயின்ட் ஹெலினா தீவில் சிறையில் மரணமடைந்தார். 


சரி இந்த மே 5ஆம் நாள் சென்னையில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? 


அதைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு நண்பருக்கு போன் செய்தேன். அவர் எடுத்து ஹலோ சொல்வதற்குள்  கட் ஆகிவிட்டது. போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டதாம். 



சரி என்று இன்னொரு நண்பருக்கு போன் செய்தேன். ஹலோ ஹலோ என்பது மட்டும் கேட்டது. வேறு ஒரு சத்தமும் வரவில்லை. டவர் இல்லையாம். அதாவது டவருக்கே சார்ஜ் இல்லையாம்! 


தொலையட்டும் என்று இன்னொரு நண்பருக்கு போன் செய்தேன். ஹலோ என்ற குரல் கேட்டது. அடுத்து தடால் என்று சத்தம் கேட்டது. போன் மட்டுமின்றி ஒரு காபி கோப்பையும் விழுந்து நொறுங்கும் ஓசை கேட்டது. வீட்டில் இரண்டு நாளாக கரண்ட் இல்லையாம்!..... 


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

 





14 கருத்துகள்:

  1. பெயரில்லா6 மே, 2022 அன்று 9:02 AM

    மெக்சிக்கன் , ஆபிரிக்கன் , ஆசிய , ஐ'ரோப்பிய மக்கள் கலந்து வாழும் அமெரிக்காவில் உணவு கூட கலவை சேர்ந்தது . அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை . ரோமில் இருக்கும் பொது ரோமன் போன்று வாழக் கற்றுக்கு கொள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! பல நாட்டு உணவுகளை ருசி பார்க்க அமெரிக்கப் பயணம் ஒரு நல்வாய்ப்பே! ஆனால் நாம் அசைவம் உண்பதில்லையே! ஆகவே options are much less!

      நீக்கு
  2. நிறைய நல்ல தகவல்கள். மெக்சிக்கன் உணவு நன்றாக இருக்கும் சார். நிறைய சைவ உணவுகளும் உண்டு. சென்னையிலும், இங்கும் கைதி கிச்சன் என்ற சைவ உணவகம் மெக்சிக்கன் உணவகம். அங்கு சுவையும் நன்றாக இருக்கும். உறவில் இளையவர்களின் ஆர்வத்திலும் தயவிலும் இரு இடங்களிலும் சுவைத்தது உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. What? Kaidi Kitchen mexicanஆ... ஹல்லோ.. அவிட ஞான் ஃபேமிலியோட போய் ஊனு கழிச்சிட்டதுண்டு

      நீக்கு
  3. நல்ல தகவல்கள்.  நேற்று மே 5 என்ன விசேஷம் என்று தெரியாது.  இன்று மே 6 என் அப்பாவின் பிறந்த நாள்.  என் பிறந்த நாள் நினைவில்லாததால் அதையே என் பிறந்தநாளாகவும் அவர் பள்ளியில் கொடுத்து விட்டதால் என் ஆபீஸ் பிறந்தநாளும் கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க. வாழ்த்துகள். நெகிழ்ச்சி

      நீக்கு
  4. தகவல்களுக்கு நன்றி. நீங்கள் சொல்லும் உணவு வகைகள் பற்றி அறிந்ததில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  5. தகவல்கள் சிறப்பு. அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
  6. "சரி இந்த மே 5ஆம் நாள் சென்னையில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?"

    உங்க கேள்விக்கு இதோ என் பதில். USA வந்தவுடன் தமிழ்நாட்டில் May மாதம் 5 தேதி வணிகர் தினம் என்பதை மறந்து விட்டீரா?

    தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5ந்தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வணிகர்கள் தங்களது கடைகளையும், நிறுவனங்களையும் மூடி, கொண்டாடி வருகின்றனர். மேலும் அன்றைய தினம் வணிகர்கள் தின மாநாடும் நடத்தப்பட்டு வருகிறது.

    பதிலளிநீக்கு
  7. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கே இந்த விவரங்கள் தெரியுமா என்று தெரியவில்லை. தாங்கள் எவ்வளவு knowledgeable person .மலைக்க வைக்கிறார் .அட்வகேட் நல்ல உணவு .உடலுக்கு மிகுந்த நன்மை தரும் .
    நாங்க avocado 🥑 அப்படியே சாப்பிடுவோம். வெண்னை மாதிரி இருக்கும். Breakfast க்கு நல்லது . குழந்தைகளுக்கு குடுக்கலாம் .

    பதிலளிநீக்கு
  8. மிகவும் சுவையான, சுவாரஸ்யமான தகவல்கள்.
    மே.5ல் எங்கள் குடும்பத்தில் மூன்று பேர்களுக்கு பிறந்த நாள்.

    பதிலளிநீக்கு