இந்தியாவின் ஆன்மிகப் பொக்கிஷமாகவும் வேதங்களின் சாரம்சமாகவும் கருதப்படுவது பகவத்கீதை.
ஆதிசங்கரரில் தொடங்கி,
விவேகானந்தரும், ராமகிருஷ்ணமடத் துறவியர் பலரும் பகவத்கீதைக்கு உரை
எழுதியிருக்கிறார்கள். அரசியல் போராட்ட வீரர்களாக விளங்கிய பால கங்காதர திலகரும்,
மகான் அரவிந்தரும், நம் காலத்தில்
தமிழ்வாணனும், கண்ணதாசனும் உரை எழுதியிருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னோடியாக
அமைந்தது பாரதியாரின் உரை. கையடக்கப் பதிப்பாகப் பலர் வெளியிட்டிருக்கிறார்கள்.
என் கையில் இருப்பது சாருப்ரபா (நக்கீரன்) வெளியீடு. விலை பத்து ரூபாய்.