தமிழ்
எழுத்துலகத்திற்கு இரண்டு மாபெரும் எழுத்தாளர்களைத் தந்த பெருமை, கடலூருக்கு
உண்டு. ஒருவர், ஜெயகாந்தன். இன்னொருவர், அவரது எழுத்துலக முன்னோடியான புதுமைப்பித்தன்.
![]() |
| கடலூர் பாடலீஸ்வரர் கோவில் |
அதெப்படி,
புதுமைப்பித்தன் திருநெல்வேலியைச் சார்ந்தவர் என்றல்லவா சொல்வார்கள் என்று நீங்கள்
கேட்கலாம். தாசில்தாராக இருந்த அவரது தந்தை, பணி ஓய்வு பெற்ற பின் சென்றடங்கிய
இடமே, திருநெல்வேலி. அப்போது புதுமைப்பித்தனுக்கு வயது பன்னிரண்டு. ஆகவே பள்ளி
மற்றும் கல்லூரிப் படிப்பு, திருநெல்வேலியில் ஆனது. ஆனால் அவர் பிறந்தது,
திருப்பாப்புலியூர் என்று அழைக்கப்படும் கடலூரில் தான் ! சொக்கலிங்கம் பிள்ளையின்
மகன் விருத்தாசலமாக அவர் பிறந்தார். (1906ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ம் தேதி). ஆம்,
இன்று தான் அவரது 107 வது பிறந்த நாள்!
****
****
