(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல்
முதலில் வைஜயந்திமாலா, பிறகு ஜெயப்ரதா. அதன்
பிறகு ரோஜாவும் குஷ்பூவும். நடுவில்
கொஞ்சநாள் மனோரமாவும் வடிவேலுவும்.
திரைத்துறையில் இருந்து அரசியலில் குதித்தவர்கள் பட்டியலில் தற்போது
சேர்ந்திருப்பவர் நமீதா! பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்திருக்கிறாராம்.
பா.ஜ.க.வினர் மட்டுமின்றி தமிழ் கூறும் நல்லுலகம் முழுதுமே கத்தரித்துப்
பாதுகாக்கும்படியான நமீதாவின் அழகிய புகைப்படத்துடன் அவரது பேட்டியை (வழக்கம்போல்)
மற்றவர்களை முந்திக்கொண்டு வெளியிட்டுள்ளது, குமுதம்.(௦௨-௧௦-௨௦௧௩ -2.10.2013 -இதழ்). ஆனால் பேட்டியில் சுவாரசியம் இல்லை.
ஏனெனில், எந்தக் கட்சியில் சேருவது என்று இன்னும் அவர் முடிவெடுக்கவில்லையாம்.