சனி, ஜூன் 29, 2013
வியாழன், ஜூன் 27, 2013
இன்று அகிலன் பிறந்தநாள்- (ஜூன் 27) - ‘பால்மரக் காட்டினிலே’
தமிழின் மறக்க முடியாத எழுத்தாளர்களில் ஒருவர், அகிலன். 1922ல் இதே ஜூன் 27 ல்
பிறந்தவர். 1988 ஜனவரி 31ல் அமரரானவர். அவரது நினைவாக இக்கட்டுரையை எழுதுவதில் நெஞ்சம் நெகிழ்கிறது.
1960 முதலே கல்கி, விகடன், கலைமகள் இம்மூன்று பத்திரிகைகளும் என் வீட்டிற்கு
வரும். (இவை மூன்றும் தான் 'குடும்ப'ப் பத்திரிகைகளாகக் கருதப்பட்டன. முதலில் மாதம் மும்முறையாகவும் பிறகு வார
இதழாகவும் வந்த 'குமுதம்' இந்த கௌவரத்தை அடைய நீண்ட
காலம் ஆயிற்று. எனவே குமுதம் தொடர்ச்சியாக வாங்க மாட்டார்கள்).
அகிலன் (என்கிற அகிலாண்டம்) |
புதன், ஜூன் 26, 2013
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் (3): இதோ வந்து விட்டது தீர்ப்பு!
Updated 26 June 2013 (இதோ தீர்ப்பு!)
ஃபிஷர் வெர்ஸஸ் யுனிவர்சிடி ஆஃப் டெக்ஸஸ்
(Fisher vs University of Texas)
இந்த வழக்கில் இன்று சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
“டெக்ஸஸ் பல்கலைக்கழகம்
கூறுவதை ஏற்பதற்கில்லை. ‘இனம்’ என்ற ஒன்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே
‘பன்முகத்தன்மை’ யை (diversity in student body) கொண்டுவர வேறு வழிகள் இல்லை
என்பதைப் பல்கலைக்கழகம் சரியாக ஆராய்ந்த பிறகு தான் இம்முடிவை எடுத்ததா என்று
சரியான தகவல் இல்லை. எனவே நீங்கள் விசாரித்து சொல்லுங்கள்” என்று அம்மானில அப்பீல்
கோர்ட்டுக்கு உத்தரவிட்டதுடன் நிறுத்திக்கொண்டு விட்டது சுப்ரீம் கோர்ட்.
‘கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் இப்போது
பெரும்பான்மையாகப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்துவருகிறார்கள். அதே இனத்தவர்
ஜனாதிபதியாகவே ஆகியிருக்கிறார். எனவே, தனியாக ‘இனம்’ என்ற ஒரு விஷயத்திற்கு ஏன்
முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ - என்பது சுப்ரீம் கோர்ட்டின் கருத்து.
செவ்வாய், ஜூன் 25, 2013
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்- 4 முக்கிய வழக்குகள் (2) (updated on 26 June 2013)
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் , வாஷிங்டன் |
இன்று பார்க்கப் போகும் இரண்டு வழக்குகளும்
குடும்ப வாழ்க்கை பற்றிய மாறிவரும் சிந்தனைப்போக்கை ஒட்டியதாகும்.
1. ஹாலிங்க்ஸ்வொர்த் வெர்ஸஸ் பெர்ரி (Hollingsworth vs Perry)
2.
யு.எஸ் வெர்ஸஸ் விண்ட்ஸர் (US vs Windsor)
உயிரினங்களின் அடிப்படைப்
பண்புகளில் தலையாயதாகக் கருதப்படும் இனப்பெருக்கம் என்ற கொள்கையானது மனிதனைப்
பொறுத்தவரையில் தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது எனலாம். இதற்கு இரண்டு
காரணங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது: (1) சில மனிதர்களால் இனப்பெருக்கம் செய்ய
முடிவதில்லை. இதற்கு மருத்துவம் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். (2) சில
மனிதர்கள் இனப்பெருக்கம் செய்ய விரும்புவதில்லை. இதற்கும் மருத்துவ மற்றும்
பொருளாதாரக் காரணங்கள் இருக்கலாம்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்: 4 முக்கிய வழக்குகள் (1) (updated 26 June 2013)
சுப்ரீம்கோர்ட், வாஷிங்டன் |
2013 கோடை விடுமுறைக்குமுன்
அமெரிக்க சுப்ரீம்கோர்ட் தீர்மானிக்கவிருக்கும் மூன்று முக்கிய வழக்குகள் இவை
என்று அமெரிக்க பத்திரிகைகள் தினமும் எழுதிவருகின்றன. இவ்வழக்குகள்
பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கும் தன்மையுள்ளவை என்பதால் இவற்றின்
தீர்ப்புக்கள் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றன.
1. ஷெல்பி கவுண்ட்டி வெர்ஸஸ் ஹோல்டர் (Shelby County Vs Holder)
2.
ஃபிஷர் வெர்ஸஸ் யுனிவர்சிடி
ஆஃப் டெக்ஸஸ்
(Fisher vs
University of Texas)
3.
ஹாலிங்க்ஸ்வொர்த் வெர்ஸஸ்
பெர்ரி (Hollingsworth vs
Perry)
4.
யு.எஸ் வெர்ஸஸ் விண்ட்ஸர் (US vs Windsor)
ஓரளவு எளிய மொழிநடையில்
எனக்குப் புரிந்த அளவுக்கு இவற்றைப் பற்றிய சில விவரங்களை இங்கு தருகிறேன். விவரம்
அறிந்தவர்கள் இதில் ஏதும் கருத்துக் குறைபாடு இருந்தால் பூர்த்திசெய்யலாம்.
முதல் வழக்கு: வாக்குரிமை
குறித்த வழக்கு -ஷெல்பி கவுண்ட்டி வெர்ஸஸ் ஹோல்டர் (Shelby County Vs Holder)
புதன், ஜூன் 19, 2013
அமெரிக்கா : சுப்ரீம் கோர்ட் செய்வது சரியா?
அப்போதெல்லாம் அடிக்கடி இந்திய சுப்ரீம் கோர்ட்டின் பெயர் பத்திரிகைகளில்
அடிபட்டுக்கொண்டிருந்தது. முக்கிய காரணம், யாருக்கு வேண்டுமானாலும் ஜாமீன்
வழங்குவது தான்.
புதுடில்லி சுப்ரீம் கோர்ட் |
எப்படிப்பட்ட குற்றவாளியானாலும் சரி, கீழ் கோர்ட்டும் மானில ஹைக்கோர்ட்டும்
ஜாமீன் வழங்க மறுத்தால் உடனடியாக புதுடில்லிக்குப் போய் சுப்ரீம் கோர்ட் மூலம்
ஜாமீன் பெற்று விடுவார்கள். அதனால் பொதுமக்கள் மத்தியில் சுப்ரீம் கோர்ட் என்றாலே
மரியாதை குறைந்து கொண்டிருந்த சூழ்நிலையில் வெளியான நகைச்சுவை துணுக்கு அது:
திங்கள், ஜூன் 17, 2013
நியூயார்க் நகரில் வீதியில் உறங்கும் 50,000 பேர்
(நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க் (Michael Bloomberg)கின் பதவிக்காலம் முடியப்போகிறது. வரப்போகும் மேயர் தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்கள் நகரெங்கும் ஓட்டுவேட்டைக்கு
முனைந்து கொண்டிருக்கிறார்கள். இப்பின்னணியில் இன்றைய ஜூன் 17 – நியூயார்க் டைம்ஸ்
தலையங்கத்திலிருந்து சில முக்கிய அம்சங்கள்.)
நியூயார்க் சென்ட்ரல் பார்க் எதிரில் சர்ச் வாசலில் உறங்கும் வீடில்லாதவர் |
நேற்று இரவு நியூயார்க் நகரில் வீடில்லாமல்
வீதிகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள். இதில் 21
ஆயிரம் பேர் சிறுவர்கள். 2002ல் ப்ளூம்பர்க் பதவி ஏற்றுக்கொண்ட போது இருந்ததைவிட
இது மிக அதிகமான எண்ணிக்கை யாகும்.
இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கற்பழிப்பு
அமெரிக்கா என்ன சொல்கிறது?
நியூயார்க் டைம்ஸ் ஜூன் 11 இதழில் வெளியான
கட்டுரையின் சில அம்சங்களை இங்கே தருகிறேன்:
நியூயார்க்கில் சென்ட்ரல் பார்க்கில் சைக்கிள் பெண் |
சென்ற டிசம்பர் மாதம் புதுடில்லி பேருந்தில் ஒரு
மாணவி கூட்டுப் பலவந்தத்திற்கு ஆளாகி மரணமடைந்த செய்தி வெளியானதன் பின்னணியில்,
இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண் பயணிகளின் எண்ணிக்கை 2013ன் முதல்
காலாண்டில் 35 சதம் குறைந்துவிட்டது.
ஞாயிறு, ஜூன் 16, 2013
அமெரிக்காவின் புத்தகச் சந்தை
அச்சுப்புத்தகங்கள்
படிக்கும் பழக்கம் அமெரிக்காவில் குறைந்துகொண்டே வருகிறது. புதிதாக வெளியாகும் ஓர்
(ஆங்கிலப்) புத்தகத்தின் விலை, கெட்டி-அட்டை (hard cover) யானால்
22 டாலர் முதல் 30 டாலர் வரை இருக்கும். கெட்டி-அட்டை பிரதிகள் விற்றுத்
தீர்ந்ததும் காகித-அட்டை (paperback) பிரதி வெளியிடுவார்கள். அது 16 முதல் 18
டாலர் இருக்கும். இது உண்மையிலேயே அதிக விலையாகும்.
தயாரிப்புச் செலவு
அதிகரித்துக்கொண்டே வருவதால் புத்தக வெளியீட்டார்கள் பலத்த இழப்பில்
இருக்கிறார்கள். இதனால் செலவைக் குறைக்க 90 சதம் புத்தகங்கள் சீனாவில் தான்
அச்சடிக்கப்படுகின்றன. டைப் செட்டிங்க் மட்டும் பல வருடங்களாகவே இந்தியா, மெக்ஸிகோ,
பிரேசில் போன்ற வெளிநாடுகள் மூலம் தான் நடக்கிறது. ஒருசில பல்கலைக்கழகங்கள்
மட்டுமே தங்கள் புத்தகங்களை முழுவதுமாக அமெரிக்காவில் தயாரிக்கின்றனர்.
விலை கூடுவதால் அச்சுப்பிரதிகள்
வாங்குவது குறைந்துவருகிறது. இதற்கு மாற்றாக மின்-புத்தகங்கள் பிரபலம் அடைந்து
வருகின்றன. என்றாலும் அவற்றின் பங்கு மொத்த விற்பனையில் 10 சதம் கூட இல்லை. ஆனால் ஆண்டுக்காண்டு
வளர்ச்சிவிகிதம் அதிகரித்துக்கொண்டே வருவதால் 2015ல் சுமார் 25
சதம் புத்தகங்கள், மின்புத்தகமாகவே
விற்கும் என்கிறார்கள்.
“ஒற்றை-குழந்தை-பெற்றோர்கள்” : அமெரிக்க ஆய்வு
பெற்றோர்களுக்கு
ஒற்றைக் குழந்தையாக இருப்பதின் சாதக பாதகங்களைப் பற்றி லாரன் ஸேண்ட்லர் (Lauren Sandler) என்ற பெண்மணி
எழுதியுள்ள புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. (“One and Only: The Freedom of Having an Only Child
and the Joy of Being One”). இது பற்றிய அறிமுகம், நியூயார்க் டைம்ஸ் ஜூன்
9 ஞாயிறு இதழில் வெளியானது.
பிட்ஸ்பர்க் மியூசியத்தில் (கண்ணாடி) ஒற்றை மனிதன் நடனம் |
‘எது வரவேற்கத்தக்கது
– ஒற்றைக் குழந்தையா, பன்மைக் குழந்தைகளா?’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் பல்வேறு
ஆய்வுகள் நடந்துள்ளன. அவற்றின் சார்பாகவும், ஒரே ஒரு பெண்-குழந்தைக்குத் தாயாக
இருக்கும் தன் சொந்த அனுபவத்தைச் சார்ந்தும் இவர் இக்கட்டுரையில் சில விஷயங்களைக்
கூறுகிறார். அவையாவன:
வெள்ளி, ஜூன் 14, 2013
நியூயார்க்கில் இந்த வாரம்
(ஜுன் 9 முடிய)
வாசகர்கள் (?!)
மன்னிக்கவேண்டும். 2013 மே 22 முதல் பன்னிரண்டு நாட்கள் உள்நாட்டுப் பயணமாக
அமெரிக்காவின் பல பகுதிகளில் பயணம் செய்தோம். அதன் காரணமாகவும், ஒரு வாரப்பத்திரிகையின்
சிறுகதைப்போட்டிக்குக் கதை அனுப்பலாமே என்று சில நல்ல (!) இதயங்கள் திடீரென்று கூறிய
ஆலோசனையின் நப்பாசையாலும் வலைப்பூவில் எழுதுவது தள்ளிப்போய்விட்டது.
அமெரிக்காவில் இருக்கப்போவது இன்னும் இரண்டே மாதங்கள் தான் என்பதால், மற்ற விஷயங்கள் எழுதுவதை விட்டு, அமெரிக்காவில் பத்திரிகைகளில் வரும் கடிதங்கள், விளம்பரங்கள் , செய்திகள், கட்டுரைகளிலிருந்து சில சுவாரஸ்யமான பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்தக் கட்டுரை. வாரம் ஒருமுறை எழுதலாம் என்றிருக்கிறேன்.
அமெரிக்காவில் இருக்கப்போவது இன்னும் இரண்டே மாதங்கள் தான் என்பதால், மற்ற விஷயங்கள் எழுதுவதை விட்டு, அமெரிக்காவில் பத்திரிகைகளில் வரும் கடிதங்கள், விளம்பரங்கள் , செய்திகள், கட்டுரைகளிலிருந்து சில சுவாரஸ்யமான பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்தக் கட்டுரை. வாரம் ஒருமுறை எழுதலாம் என்றிருக்கிறேன்.
புதன், ஜூன் 12, 2013
அமரர் தி.ஜ.ர.
குடும்பத்திற்கு
உதவிட வேண்டுகிறேன்
கலைமகள் குடும்பத்திலிருந்து வரும் ‘மஞ்சரி’ மாத இதழின் ஆசிரியராக சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றியவரும், தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவருமான அமரர் தி.ஜ.ரங்கனாதன் அவர்களின் குடும்பம் இன்று வறுமையில் வாடுகின்றது. “தி.ஜ.ர-தான் எனது உரை நடைக்கு குரு” என்று கவிஞர் கண்ணதாசன் கூறியிருக்கிறார். விளம்பரமின்றி தமிழ்ப்பணியும் தேசப்பணியும் புரிந்த அமரர் தி.ஜ.ர. குடும்பத்திற்கு அனைவரும் உதவிட வேண்டுகிறேன். இது பற்றி மூத்த எழுத்தாளர் திரு வெங்கட்சாமினாதன் அவர்கள் “திண்ணை” யில் விடுத்த அறிக்கை இது:
எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம்
அறிந்த ஒரு தமிழ்
எழுத்தாளர், தி.ஜ.ர
என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன்
1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள்
வாழ்ந்தவர். நவீன
தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில்
முத்தவர். சிறு கதை,
மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள்
என பல துறைகளிலும்
தன் ஆளுமையின் பதிவுகளை
விட்டுச் சென்றுள்ளவர். தான்
செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு
வளம் ஊட்டி சிறப்பித்தவர்.
தேசீய போராட்டத்திலும் பங்கு
கொண்டு சிறை சென்றவர்.
எவ்வளவு சிறப்பான ஆளுமையான
போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். அடக்கம் மிகுந்தவர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)