திங்கள், ஏப்ரல் 18, 2022

“இன்னைக்கு மட்டும் வேண்டாங்க ப்ளீஸ்!” (இன்று கிழமை திங்கள் -1)

 “இன்னைக்கு மட்டும் வேண்டாங்க ப்ளீஸ்!”

(இன்று கிழமை திங்கள் -1)


(குடும்பம் ஒரு தொடர்கதை)

அமெரிக்காவில் ஏழாவது நாள் 


"பாருங்க, நான் முடியாதுன்னு  எப்பவோ  சொல்லியாச்சு. ஆமாம்!"


"ப்ளீஸ் கோவிச்சுக்காதடி செல்லம்! இன்னிக்கு ஒருநாள் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ."


"இன்னைக்கு மட்டும் என்ன ஸ்பெஷலாம்? ஆறுநாளா  பாத்துட்டு தானே இருக்கேன்! உயிர் போறது எனக்கு!"


"அப்படிச் சொல்லாதடி தங்கம். இன்னிக்கு நான் நல்ல மூடுல இருக்கேன். அதனால சூப்பரா இருக்கும் பாரேன்! ஆனா ஒண்ணு, அப்புறம் தினமும் இதே மாதிரி தான் வேணும்னு கேட்கக்கூடாது!"

 

"உஷ்! மெதுவாப் பேசுங்க! குழந்தை முழிச்சிட்டு  இருக்கான்!"

அண்மைக்காலப் புகைப்படம்-2022

"ஆமாண்டி, ஆறுமாசக் குழந்தை ஓடிவந்து ஒன்னைத் தடுக்கப் போறான். சரி சீக்கிரம் சொல்லு, நான் ஆபிஸ் போகணுமா   வேண்டாமா?"

 

"இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் வந்தாலும் வந்தது, ஆம்பளைங்களோட தொந்தரவு தாங்கமுடியல. விஜயா வீட்டிலும் இதே கதைதான்னு சொல்றா. ஏன்தான் இப்படி இருக்கீங்களோ?"


"விஜயாவாவது, வீணாவாவது!  நம்ம கதைக்கு வா. ப்ளீஸ் நேரம் ஆயிட்டே போகுது. நான் லாக்-இன்  பண்ண வேண்டாமா?"



"நீங்க எப்படிக் கெஞ்சினாலும் நான் மசிய மாட்டேன். நான் ஸ்ரீரங்கத்துப் பொண்ணு! ஞாபகம் இருக்கட்டும்!"


"அதை நம்பித் தானே நான் ஏமாந்து போயிட்டேன்! ஸ்ரீரங்கம் பொண்ணுன்னா ஆண்டாள் மாதிரி அடக்க ஒடுக்கமாக இருப்பான்னு எங்க பாட்டி எனக்கு சிபாரிசு பண்ணினாளே!"


"நீங்க மட்டும் என்னவாம்? பாக்கறதுக்கு அப்பாவி மாதிரி இருக்கான், கண்ட்ரோல் பண்றது ஈஸி, அதனாலே இவனையே  பண்ணிக்கோன்னு எங்க பாட்டியும் தான் சொன்னா! நல்ல வேளை, நீங்க பண்ற ரகளையெல்லாம் பாக்காம அவ  போய்ச் சேர்ந்துட்டா!"


"ப்ளீஸ், பாட்டிகளை எல்லாம் தூர வை. நேரம் ஆயிட்டு இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோ. நான் சொன்னபடி செய். என் சக்கரைக்கட்டி இல்லே, ப்ளீஸ் சரின்னு சொல்லு."


"முடியவே முடியாது. மீறி செஞ்சீங்கன்னா, பாதியிலே உங்க வை-ஃபையை கட் பண்ணிடுவேன்."

 

"இங்க பாரு, வெறும் பத்து நிமிஷ சமாச்சாரம்! இதுக்கு இவ்வளவு கலாட்டா பண்ணலாமா! முதலிரவின் போது என்ன சொன்னே? வாழ்நாள் முழுக்க நீங்க எது சொன்னாலும் கேட்கிறேன்னு சொன்னியா இல்லையா?"


"அன்னிக்கு பூனைக்குட்டி மாதிரி வேஷம் போட்டீங்க!...."


"அதை விடு. நாளையிலிருந்து நீ சொல்ற மாதிரியே நடக்கும். ப்ராமிஸ். இன்னிக்கு வேலையை ஆரம்பிக்கலாமா? ப்ளீஸ் .."


"நீங்க பண்ற எதுவும் எனக்கு கொஞ்சம்கூடப் பிடிக்கலே! இன்னும் வற்புறுத்தினீங்கன்னா எனக்கு கெட்ட கோவம் வரும். சொல்லிட்டேன்!"


"இங்க பாரு லாக்-இன் பண்றதுக்கு நேரம் ஆச்சு. எல்லாம் உன்னாலதான். இப்ப ஏழு நிமிஷம்தான் இருக்கு. எனக்கு மூட் அவுட் ஆயிடுச்சுன்னா விஷயம் நெறக்காது. அப்புறம் குறை சொல்லிப் பயனில்லை."


"இல்லாட்டி மட்டும் ரொம்ப 'இது' பண்ணிடுவீங்களாக்கும்! நேத்து என்ன லட்சணமா பண்ணினீங்கன்னு   நினைச்சு பாருங்க."


"சரி சரி புரிஞ்சுது. இன்னிக்கு நீ எதிர்பார்க்கிற மாதிரி பண்றேன் போதுமா?"


"எத்தனை தடவை நீங்கள் சொன்னாலும் என் பதில் ஒண்ணு தான்-  இன்னிக்கு முடியாதுன்னா முடியாதுதான்!"


"இங்க பாருடி சோதிக்காதே. இன்னிக்கு ஒருநாள் மட்டும் கோவாப்பரேட் பண்ணு. அது போதும் எனக்கு!"


"மிஸ்டர்! வொர்க் ஃப்ரம் ஹோம்  பண்றீங்களே, ஃபேன்லையும் டியூப்லைட்டிலும் இருக்கிற ஒட்டடையைப் பார்த்து பார்த்து போரடிச்சிட்டு  இருக்கீங்களே, ஒரு சேஞ்சுக்காக ஒருவாரம் பிரேக்பாஸ்ட் நீங்களே பண்ணுங்கன்னு பர்மிஷன் கொடுத்தா, ஆறுநாளா அரிசி உப்புமாவே பண்ணிட்டு இன்னிக்கும் அதையே பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறீங்களே, உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா?"


-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

**** 

15 கருத்துகள்:

  1. ம்க்கும்.... ரவா உப்புமா பண்ணாம, அரிசி உப்புமா பண்ணுவதே பெரிய தியாகமாகத் தெரியலையா?

    பதிலளிநீக்கு
  2. உப்மாவுக்கு இந்த பில்டப்பா? "அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட" வசனம் ஏன் எனக்கு இப்பத் தோணுது?

    பதிலளிநீக்கு
  3. Adults Only கதை மாதிரி கொண்டு போதே நினைச்சேன்..
    Twist in the tail இருக்கும்னு...
    சரி சரி உப்புமா மேட்டரா..

    பதிலளிநீக்கு
  4. போனமுறை சென்றபோதும் இதுபோலதான் கிண்டினிக்கலாக்கும்.

    பதிலளிநீக்கு
  5. ஏதோ " பிட் Film " மாதிரி கதை சொல்ல போறிங்கன்னு பாத்தா ஏமாத்திட்டிங்களே சார்..!

    பதிலளிநீக்கு
  6. ​இதை நான் எதிர்பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  7. கடைசில உப்புமா மே தானா..... ஹாஹா ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. நன்று நன்று. எந்த எதிர்பார்ப்பையோ தூண்டக் விட்டு உப்புமாவில் வந்து முடித்த பாங்கு திகில் கதை போல் இருந்தது.

    பதிலளிநீக்கு
  9. ஹாஹாஹா....ஆரம்பித்தது வாசித்து வரும் போதே புரிந்தது கடைசியில் வேறாகத்தான் இருக்கும் என்று.

    அரிசி உப்புமாவுக்கு பாப்புலாரிட்டி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. நான் தனியாக இருந்த போது பெரும்பாலும் நானே செய்து சாப்பிட்ட ரவா உப்புமாவை விட இது பரவாயில்லையோ!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  11. எதிர் பார்த்ததுதான், பில்ட் அப் வேறு அதிகமாக இருந்ததா சுலபமாக கணிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு