செவ்வாய், மார்ச் 19, 2013

சாகித்ய அகாதெமி(2)- மொழிவாரி விருதுகள் அட்டவணை

சாகித்ய அகாதெமிக்கு இது மணிவிழா ஆண்டு. (1954 மார்ச் 12ஆம் நாள் அகாதெமி நிறுவப்பட்டது). 2012 ஆம் ஆண்டுக்கான விருதுகளுடன் இதுவரை 58 முறை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருதின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம்.

(2013க்கான விருதுகள், 2014 பிப்ரவரியில் தான் வழங்கப்படும்).


முதல் விருது(1955)
ரா.பி.சேதுபிள்ளை 
கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

(1) கடந்த காலத்தில் எல்லா மொழிகளுக்கும் எல்லா ஆண்டுகளிலும் விருது வழங்கப்பட்டதில்லை. எனவே எந்த ஒரு மொழியும் 58 முறை விருது பெறவில்லை. (இப்போது எந்த மொழியையும் விட்டுவிடக் கூடாது என்ற கொள்கை கடைப்பிடிக்கப் படுகிறது).2102-விருது-D.செல்வராஜ் 

(2) அரசியல் சட்டம் அங்கீகரித்த 22 மொழிகள் தவிரவும் ஆங்கிலம், ராஜஸ்தானி ஆகிய இரண்டு மொழிகளும் சேர்த்து மொத்தம் 24 மொழிகளுக்கு இப்போது விருது வழங்கப்படுகிறது.

(3) 1960க்குப் பிறகு விருதுக்குச் சேர்க்கப்பட்ட மொழிகள்:
ஆங்கிலம் (1960), மைதிலி (1966), டோக்ரி-Dogri (1970), மணிப்புரி (1973) ராஜஸ்தானி (1974), கொங்க்கணி (1977), நேப்பாளி (1977), போடோ -Bodo (2005), ஸாந்தலி (2005)


(4) எந்தெந்த மொழிகள் என்னென்ன இலக்கிய வகைகளில் விருது பெற்றுள்ளன என்பதைக் காட்டும் அட்டவணை கீழே உள்ளது:

  LANGUAGE First Award NOVEL Short Story POETRY DRAMA PROSE TOTAL
1 Assamese 1955 16 8 14 0 11 49
2 Bengali 1955 25 2 18 1 9 55
3 Bodo 2005 3 1 4 0 0 8
4 Dogri 1970 5 8 20 3 2 38
5 ENGLISH 1960 20 1 8 1 11 41
6 Gujarathi 1955 12 3 11 1 27 54
7 Hindi 1955 20 1 26 0 10 57
8 Kannada 1955 16 3 10 3 22 54
9 Kashmere 1956 2 4 21 4 10 41
10 Konkani 1977 4 8 17 1 6 36
11 Maithili 1966 5 10 17 1 10 43
12 Malayalam 1955 17 6 16 0 15 54
13 Manipuri 1973 9 14 11 3 1 38
14 Marathi 1955 15 2 9 2 29 57
15 Nepali 1977 8 8 9 1 8 34
16 Oriya 1955 4 11 20 2 15 52
17 Punjabi 1955 10 11 20 7 4 52
18 Rajasthani 1974 5 10 19 3 2 39
19 Sanskrit 1956 3 2 31 0 9 45
20 Santhali 2005 0 1 1 1 1 4
21 Sindhi 1959 6 7 17 4 11 45
22 Tamil 1955 23 6 6 1 17 53
23 Telugu 1955 5 10 17 2 17 51
24 Urdu 1955 6 7 20 0 18 51

இந்த அட்டவணையைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். நாளை அலசுவோம்.

(மேற்படி விருது தவிர, மொழிபெயர்ப்புக்காகவும், 35 வயது  நிரம்பாத இளம் படைப்பாளிகளுக்காகவும், குழந்தைகளுக்கான நூல்களுக்கும்  தலா ரூபாய் 50,000 என அகாதெமி விருதுகள் வழங்குகிறது. அதைப்  பின்னால் பார்ப்போம்).

(ஆதாரம்: சாகித்ய அகாடெமியின் இணையதளம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக