தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு சாகித்ய அகாதெமியின் பரிசு பெற்ற நூல்கள் மொத்தம் 15.
7 நாவல்களும், 7 கவிதைகளும் ஒரே ஒரு தன்வரலாறும் இவற்றில் அடங்கும். மொத்தம் 7 மொழிகளுக்கு இவை சென்றுள்ளன:
திருக்குறள், தெலுங்கிலும், கொங்க்கணியிலும், கலித்தொகை மலையாளத்திலும், குறுந்தொகை சமஸ்கிருதத்திலும், குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி மலையாளத்திலும்,
சிலப்பதிகாரமும், சங்கப்பாடல்கள் தொகுப்பு ஒன்றும்
ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பரிசு பெற்றுள்ளன. (கீழே காண்க).
நாவல்களைப் பொருத்தவரை நல்ல எழுத்தாளர்களின் நூல்கள்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது (இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சிவசங்கரி, ஜெயகாந்தன், தோப்பில் முகமது மீரான் ). தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் தெலுங்கில்
பெயர்க்கப்பட்டு பரிசு பெற்றுள்ளது. (விவரம் கீழே).
லிவிங் ஸ்மைல் வித்யாவின் "நான் சரவணன் அல்ல"என்ற
தன்வரலாறு தமிழ்ச்செல்வி என்பவரால் மொழியாக்கம்
செய்யயப்பட்டு பரிசு பெற்றுள்ளது.
பரிசு பெறாத மொழியாக்க நூல்கள் நிச்சயமாக அதிக
எண்ணிக்கையில் இருக்கக்கூடும். அவை பற்றி சரியான
தகவல்கள் முழுமையாக இல்லாத நிலையில் இந்த ஆய்வை
இத்துடன் முடித்துக்கொள்வதே நியாயமானதாகத் தோன்றுகிறது.
குறிப்பு:
'பன்மொழிப் பதிப்புத்துறை ஞாநி' என்று சொல்லத்தக்க எனது
தில்லி நண்பர், கவிஞர் 'புதியவன்' ஷாஜகான், 'தில்லி(Guy)கை'
நிகழ்ச்சி யொன்றை முன்னிட்டு, அவர் தயாரித்து வழங்கிய
உரையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்:
http://pudhiavan.blogspot.in/2012/07/blog-post_15.html
எத்தனை மணி நேர உழைப்பின் பயன் இந்த உரை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய மொழிகளுக்கிடையே இருந்த பரஸ்பர மொழியாக்கம் பற்றி நிறைய தகவல்கள் இதில் உள்ளன. மறவாமல் படியுங்கள்.
******
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
7 நாவல்களும், 7 கவிதைகளும் ஒரே ஒரு தன்வரலாறும் இவற்றில் அடங்கும். மொத்தம் 7 மொழிகளுக்கு இவை சென்றுள்ளன:
| மலையாளம் | 4 |
| தெலுங்கு | 4 |
| கன்னடம் | 2 |
| ஆங்கிலம் | 2 |
| கொங்க்கணி | 1 |
| ஸமஸ்கிருதம் | 1 |
| வங்காளி | 1 |
| 15 |
திருக்குறள், தெலுங்கிலும், கொங்க்கணியிலும், கலித்தொகை மலையாளத்திலும், குறுந்தொகை சமஸ்கிருதத்திலும், குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி மலையாளத்திலும்,
சிலப்பதிகாரமும், சங்கப்பாடல்கள் தொகுப்பு ஒன்றும்
ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பரிசு பெற்றுள்ளன. (கீழே காண்க).
| கவிதை | ||
| 1991 | திருவள்ளுவர் | திருக்குறள் |
| தெலுங்கு | மொழிபெயர்த்தவர் | திருக்குறள் |
| சி.ஆர்.சர்மா | ||
| 1991 | பல்வேறு புலவர்கள் | கலித்தொகை |
| மலையாளம் | மொழிபெயர்த்தவர் | கலித்தொக |
| எம். நாராயணங்குட்டி | ||
| 1995 | இளங்கோ அடிகள் | சிலப்பதிகாரம் |
| ஆங்கிலம் | மொழிபெயர்த்தவர் | The Tale of the Anklet |
| ஆர். பார்த்தசரதி | ||
| 2004 | குலசேகர ஆழ்வார் | பெருமாள் திருமொழி |
| மலையாளம் | மொழிபெயர்த்தவர் | குலசேகர ஆழ்வாருட |
| புதுசேரி ராமச்சந்திரன் | பெருமாள் திருமொழி | |
| 2008 | திருவள்ளுவர் | திருக்குறள் |
| கொங்க்கணி | மொழிபெயர்த்தவர் | திருக்குறள் |
| புருஷோத்தம் மல்யா | ||
| 2008 | பல்வேறு புலவர்கள் | குறுந்தொகை |
| ஸமஸ்கிருதம் | மொழிபெயர்த்தவர் | குறுந்தொகை |
| ஏ. வி. சுப்ரமணியம் | ||
| 2012 | பல்வேறு புலவர்கள் | சங்கப் பாடல்கள் |
| ஆங்கிலம் | மொழிபெயர்த்தவர் | Love Stands Alone |
| ம.இலெ.தங்கப்பா |
நாவல்களைப் பொருத்தவரை நல்ல எழுத்தாளர்களின் நூல்கள்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது (இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சிவசங்கரி, ஜெயகாந்தன், தோப்பில் முகமது மீரான் ). தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் தெலுங்கில்
பெயர்க்கப்பட்டு பரிசு பெற்றுள்ளது. (விவரம் கீழே).
| நாவல் | ||
| படைப்பாளி | நூலின் பெயர் | |
| 1991 | இந்திரா பார்த்தசாரதி | குருதிப்புனல் |
| வங்காளி | மொழிபெயர்த்தவர் | ரக்தபன்யா |
| எஸ். கிருஷ்ணமூர்த்தி | ||
| 1996 | அசோகமித்திரன் | பதினெட்டாவது அட்சக்கோடு |
| கன்னடம் | மொழிபெயர்த்தவர் | ஹதினெண்ட்டினெயெ அட்சரேகெ |
| சேஷ நாராயணா | ||
| 1997 | சுந்தர ராமசாமி | ஜே.ஜே.சில குறிப்புகள் |
| மலையாளம் | மொழிபெயர்த்தவர் | ஜே.ஜே.சில குறிப்புகள் |
| ஆற்றூர் ரவி வர்மா | ||
| 2005 | தோப்பில் முகமது மீரான் | கூனன் தோப்பு |
| மலையாளம் | மொழிபெயர்த்தவர் | கூனன் தோப்பு |
| வேணுகோபால பணிக்கர் | ||
| 2007 | சிவசங்கரி | பாலங்கள் |
| தெலுங்கு | மொழிபெயர்த்தவர் | அந்த்தராலு |
| மந்த்ரிப்ரகட சேஷாபாய் | ||
| 2010 | ஜெயகாந்தன் | ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் |
| தெலுங்கு | மொழிபெயர்த்தவர் | கல்யாணி |
| ஜி.பாலாஜி | ||
| 2011 | மாயூரம் வேதநாயகம் பிள்ளை | பிரதாப முதலியார் சரித்திரம் |
| தெலுங்கு | மொழிபெயர்த்தவர் | பிரதாப முதலியார் சரித்ரா |
| எஸ். ஜயபிரகாஷ் |
லிவிங் ஸ்மைல் வித்யாவின் "நான் சரவணன் அல்ல"என்ற
தன்வரலாறு தமிழ்ச்செல்வி என்பவரால் மொழியாக்கம்
செய்யயப்பட்டு பரிசு பெற்றுள்ளது.
| தன்வரலாறு | ||
| படைப்பாளி | நூலின் பெயர் | |
| 2011 | லிவிங்கு ஸ்மைல் வித்யா | நான் சரவணன் இல்லை |
| கன்னடம் | மொழிபெயர்த்தவர் | "நானு அவனல்லா, அவளு" |
| தமிழ்ச்செல்வி |
பரிசு பெறாத மொழியாக்க நூல்கள் நிச்சயமாக அதிக
எண்ணிக்கையில் இருக்கக்கூடும். அவை பற்றி சரியான
தகவல்கள் முழுமையாக இல்லாத நிலையில் இந்த ஆய்வை
இத்துடன் முடித்துக்கொள்வதே நியாயமானதாகத் தோன்றுகிறது.
குறிப்பு:
'பன்மொழிப் பதிப்புத்துறை ஞாநி' என்று சொல்லத்தக்க எனது
தில்லி நண்பர், கவிஞர் 'புதியவன்' ஷாஜகான், 'தில்லி(Guy)கை'
நிகழ்ச்சி யொன்றை முன்னிட்டு, அவர் தயாரித்து வழங்கிய
உரையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்:
http://pudhiavan.blogspot.in/2012/07/blog-post_15.html
எத்தனை மணி நேர உழைப்பின் பயன் இந்த உரை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய மொழிகளுக்கிடையே இருந்த பரஸ்பர மொழியாக்கம் பற்றி நிறைய தகவல்கள் இதில் உள்ளன. மறவாமல் படியுங்கள்.
******
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

இணைப்பில் பார்க்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்குநன்றி ஐயா. என் வலைப்பூவில் பார்த்தபோது உங்கள் வலைப்பூவிலிருந்து ஒருவர் வருகை தந்தது தெரிய வந்தது. இங்கே வந்து பார்த்தால்.....
பதிலளிநீக்குநானும் இன்று காலையில் என் முகநூல் பக்கத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்திருக்கிறேன்.
இப்படி ஏதாவது செய்துவிடுவீர்களோ என்று.... பயப்படவில்லை, எதிர்பார்த்தேன். நன்றி.
பதிலளிநீக்குமிக உபயோகமான பதிவு. வாழ்த்துகள் சார்.
பதிலளிநீக்கு