அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு இலக்கிய விருதுகள்
****
சிறுகதைப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வு -2025 ஜனவரி 17 வெள்ளிக்கிழமை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்றது.
![]() |
அழைப்பிதழ் |
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பரிசு பெற்றவர்களுக்கு ஜிபே மூலம் பரிசுத்தொகை அனுப்பப்பட்டு விட்டது. (வெளிநாட்டு மூவரைத் தவிர).
முதல் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்த ரூ 5000 மங்கலகரமாக இருக்கவேண்டும் என்பதற்காக 5001 ஆகத் திருத்தப்பட்டது. இரண்டாம் பரிசு ஏற்கெனவே மங்கலகரமான ரூ 1001 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் பரிசுக் கதைகள் பத்தும் 'வேண்டுதல்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாகவும், இரண்டாம் பரிசுக் கதைகள் 25 ம் 'கரையேற்றம்' என்ற தலைப்பில் இன்னொரு தொகுப்பாகவும் வெளியிடப்பட்டன.
![]() |
செயற்கை நுண்ணறிவினால் ஆக்கிய படம் |
![]() |
இதுவும் செயற்கை நுண்ணறிவினால் ஆக்கிய படம் |
விழா நிகழ்வின் வீடியோ விரைவில் இங்கு வெளியிடப்படும். இதற்கிடையில் பரிசு பெற்ற எழுத்தாள நண்பர்கள் பலர் தத்தம் வலைப்பதிவுகளில் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.
இலக்கிய இதழ்கள் இந்த நிகழ்வை மனமுவந்து போற்றியுள்ளன. இன்று 'அமுதசுரபி' மாத இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரையின் படவடிவம் கீழே தரப்படுகிறது. அமுதசுரபி ஆசிரியர் மதிப்பிற்குரிய திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு நமது நன்றிகள். இக்கட்டுரையை வடித்த அன்பர் 'ஸ்ரீ' அவர்களுக்கும் நன்றி!
சிறப்பான பதிவு
பதிலளிநீக்குபோட்டியும் பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றதற்கும் நிகழ்வு அமுதசுரபி போன்ற தரம் வாய்ந்த இதழில் வெளியானதற்கும் வாழ்த்துகள் சார்.
பதிலளிநீக்குபங்கேற்றவர்கள் பரிசு பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
கீதா
நண்பர் ஸ்ரீராமும் தன் தளத்தில் பதிவு போட்டிருந்தார். நிகழ்வைப் பாராட்டி
பதிலளிநீக்குகீதா
நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பரிசுத் தொகை ரூ.1001/- ஒரு சகோதரர் எனக்கு அளித்த பொங்கல் பரிசாக உணர்ந்தேன். நன்றி. குவிகம் கிருபானந்தன் சகோதரருக்கும் அமுதசுரபி ஆசிரியருக்கும் நன்றிகள்
பதிலளிநீக்குஆம். பரிசு ஜி பே மூலம் கிடைத்தது. அது பெரிதில்லை. நீங்கள் எனக்கு அளித்த அங்கீகாரம் மனதில் உவகை ஏற்படுத்தியது. புத்தகமாக வெளிவந்தது பெரிய சந்தோஷம்.
பதிலளிநீக்குஉங்கள் அன்னையின் பெயரால் அது நிகழ்ந்தது. நன்றி.
அருமையான தொகுப்பு.
இந்தப் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
//சிறுகதைப் போட்டியில் பங்குபெற்று, ஆனால் பரிசு பெற முடியாமல் தவறவிட்ட எழுத்தாள நண்பர்கள், புத்தக விலையில் 25% தள்ளுபடியைக் கழித்து மீதியை அனுப்பினால் போதும்// அருமையான gesture. பாராட்டுகள்
பதிலளிநீக்குவாழ்த்துகள்..
பதிலளிநீக்கு