ஞாயிறு, ஏப்ரல் 23, 2017

நினைப்பதா மறப்பதா

பதிவு எண்   32/2017
நினைப்பதா மறப்பதா
-இராய செல்லப்பா

காலத்தால் அழியாத பாட்டு: ‘நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா?’ (கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஆனந்தஜோதி.)


நினைத்தலும் மறத்தலும் மனித மனத்தின் இரண்டு பெரும் கடமைகள் ஆகும். பிறக்கும் முன்பிருந்தே ‘நினைத்தல்’ செயல்பட்டுவருகிறது என்பதை ஆன்மிகம் மட்டுமன்றி அறிவியலும் நிரூபித்திருக்கிறது.

அறிவியல் கூறுவது:

தாயின் கருப்பையில் இருக்கும்போதே, ஒன்பது வாரம்  ஆனவுடன், கருவுக்குக் காதுகள் உருவாகத்தொடங்கிவிடும்.  பதினாறு வாரங்கள் ஆகும்போது வெளியில் இருந்து எழும் ஓசைகளை உணரத் தொடங்கிவிடும். ஆனால் வார்த்தைகள் இன்னவென்று அதற்குப் புரியாது. தாயின் குரல் மட்டும் மிகமிகத் தெளிவாகக் கேட்கும். காரணம், தாயின் குரல் வெளியிலிருந்து மட்டுமின்றி, அவளது நரம்புகள் மூலமும் பயணிப்பதால் பலமுனைகளில் இருந்தும் உணர்ந்துகொள்ளும் வசதி கருவிற்கு ஏற்படுகிறது. தாயின் நுரையீரலில் காற்று உள்வந்து வெளியேறும் ஓசையும், இரைப்பையில் எழும்பும் ஓசையும் கருவுக்குப் பழக்கமாகிவிடுகிறது. அந்த ஓசைகளின் நினைவைக்கொண்டே தாய் அருகில் இருக்கிறாள் என்று அதனால் புரிந்துகொள்ளமுடியும். இருபத்துநாலு வாரங்களில் கருவானது, வெளி ஓசைகளுக்கு ஏற்றவாறு  தலையையோ உடலையோ அசைத்து எதிர்வினை செய்யமுடியும்.

ஆகவேதான், பாரம்பரிய இசையை வாசித்துக் காட்டுவதன்மூலம் கருவுக்கு இசைஞானத்தைப் புகட்டமுடியும் என்று கண்டிருக்கிறார்கள்.

ஆன்மிகம் கூறுவது:

அபிமன்யு கதை நாமறிவோம். கிருஷ்ணனின் சகோதரியான சுபத்ராவை மணந்து கொள்கிறான் அர்ச்சுனன். அபிமன்யுவை வயிற்றில் கருவாக ஏந்தியிருக்கும் ஒரு நாளில், போர்முனை எப்படியிருக்கும், அணிவகுப்பு என்றால் எப்படி இருக்கும் என்றெல்லாம் கேட்கிறாள் சுபத்ரா.

அணிவகுப்பை ‘வியூகம்’ என்பார்கள். எதிரியை உள்ளே நுழையாதபடியும், அப்படி நுழைந்தால் உயிரோடு வெளியேற முடியாதபடியும் நுட்பமாகப் படைகளை நிறுத்திவைக்கும் ஒழுங்குமுறைக்கு வியூகம் என்று பெயர். பலவகை வியூகங்கள் உண்டு. அதில் பத்மவியூகம் என்பது மிகவும் சிக்கலானதாகும். 

அதை அமைக்கும் வழியைத் தனது குரு துரோணரிடமிருந்து கற்றுக்கொண்டவன் அர்ச்சுனன். ஆனால் அதை வேறு யாருக்கும் அவன் கற்றுத்தரக் கூடாது. மூல குருவுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. (தன்னுடைய அனுமதியின்றி, மறைவாக இருந்து  தனது வில்வித்தையைக் கற்றுக்கொண்ட குற்றத்திற்காக ஏகலவ்யனிடம் இருந்து கட்டைவிரலையே குருதட்சிணையாகக் கேட்டவர் துரோணர்.)

ஆனால், ஆசை மனையாள் கொஞ்சிக் கேட்கும்போது சொல்லாமல் இருக்க முடியுமா? வியூகம் அமைப்பது எப்படி, அதற்குள் நுழைவது எப்படி என்று உற்சாகமாகச் சொல்லத் தொடங்குகிறான் அர்ச்சுனன். கருவில் இருக்கும் அபிமன்யு அதனைக் கவனமாகக் கேட்டுக்கொள்கிறான்.

வியூகத்தினுள் நுழைந்தவன், அதிலிருந்து வெற்றியோடு தப்பி வருவது எப்படி என்பதைச் சொல்ல ஆரம்பிக்கும்போது திடீரென்று அங்கு வந்துவிடுகிறான் கிருஷ்ணன். ‘அர்ச்சுனா, என்னோடு வா’ என்று அழைத்துப்போய்விடுகிறான். அபிமன்யுவின் ஞானம் அத்துடன் நின்றுவிடுகிறது, அரைகுறையாக. பின்னால் அவன் உயிர் பிரிவதற்கும் அதுவே காரணமாகிவிடுகிறது.

மறத்தலும் இப்படியே, நம் கருவிலிருந்தே ஆரம்பமாகிவிடுகிறது. இல்லையெனில் முற்பிறவியின் ஞாபகங்கள் அல்லவா நம் மனம் முழுதும் எப்போதும் நிறைந்திருக்கும்!
*****
சிலர் இருக்கிறார்கள். அபாரமான நினைவாற்றல் படைத்தவர்கள். தங்களுக்குப் பணமுடை என்றால் யாரை கேட்டால் உடனே கிடைக்கும் என்று இவர்களுக்குத் தெரியும். எந்த நிறுவனத்தில் எந்தத் தேதியில் சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதைத் தமது நினைவுப் பலகையில்  அழியாப்பதிவாக வைத்திருப்பார்கள்.  

சம்பளத்தைப்  பணமாகக் கொடுக்கிறார்களா, வங்கியின் வழியாகவா என்பதும், வங்கியின் பெயர், கிளையின் முகவரி, தொலைபேசி எண் என்று அனைத்தும் இவர்களுடைய ஹார்ட்-டிஸ்கில் பதிந்திருக்கும். (Hard-Disk என்றேன். Heart-Disk என்று படித்தீர்களா?)

அரசாங்க ஊழியர்கள் இவர்களின் வலையில் இருந்து தப்பவே முடியாது. ஆறாவது பே-கமிஷேன் அரியர்ஸ் எப்போது வரும், எவ்வளவு வரும் என்று செய்தித்தாள் மூலம் தெரிந்து வைத்திருப்பார்கள். காலையில் காப்பி நேரத்தில் வந்து கதவைத் தட்டுவார்கள். ‘அவருக்கு கிரெடிட் ஆகிவிட்டதே, உங்களுக்கு இன்னும் வரவில்லையா?’ என்று ஆதரவாகக் கேட்பார்கள். டி.ஏ அரியர்ஸ் வந்துவிட்டதா என்பார்கள். பிஎஃப் லோன் வேண்டுமானால் சொல்லுங்கள், என் நண்பர் அங்குதான் செக் ஷன் ஆபீசராக இருக்கிறார் என்று மகிழ்ச்சியோடு தெரிவிப்பார்கள்.

அவசரத்துக்கு இவர் கடன்கேட்டால்  நாம் இல்லை என்று சொல்லிவிடவே முடியாது. உதாரணமாக, மாதக் கடைசியில் ஏதய்யா பணம் என்று நாம் எரிந்து விழுந்தால் ஆசாமி அசரமாட்டார். அடடே, எல்ஐசி  பாலிசியில் லோன் எடுத்துத் தரட்டுமா என்று ஆலோசனை கூறுவார். ஒரே நாளில் வாங்கிவிடலாம், நீங்கள் வரவேண்டும் என்றில்லை. பாலிசியை மட்டும் கொடுங்கள். மற்றதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார். பாலிசி இல்லையென்றால், அனுதாபப்படுவார். புதியதாக நகைக்கடன் தரும் கம்பெனி வந்திருக்கிறது, குறைந்த வட்டிதான், நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்று அறிமுகப்படுத்துவார்.

அவருடைய எல்லா அஸ்திரங்களையும் தாங்கிக்கொண்டு நாம் கைவிரித்து விட்டாலும் அயரமாட்டார். ‘ரொம்ப கஷ்டப்படுகிறீர்கள் போலிருக்கிறதே! நம்ம நண்பர் 'கே...' யிடம் கேட்டு ஐந்தோ பத்தோ கைமாற்று வாங்கித் தரட்டுமா? மனுஷன் நம்ப ஏரியாவுக்கே படியளக்கிறவர். நடு ராத்திரியில் கதவைத் தட்டினாலும் லட்ச ரூபாய் கிடைக்கும். பரம்பரை பணக்காரர். என்ன, வட்டி கொஞ்சம் அதிகம். அதைப் பார்த்தால் நம்ம அவசரத்துக்குப் பணம் கொடுப்பவர்கள் யார் இருக்கிறார்கள்?’ என்பார். 

என்னடா, இப்படி கொக்கி போடுகிறாரே என்று தயங்குவோம். அதே நேரம், நடுத்தர வர்க்கத்து சாபம், ஐந்தோ  பத்தோ கிடைத்தால் பரவாயில்லையே, நமக்கும் வேறு செலவுகள் இருக்கிறதே என்று சபலம் உண்டாகும். நம் கண்ணில் அப்படி ஒரு மின்னல் தோன்றுவதைத் தானே அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்! ‘சரி, நீங்கள் எட்டரை மணிக்கு வந்துவிடுங்கள். ரெடி பண்ணிவிடுகிறேன்’ என்பார். அதற்குப் பத்து நிமிடம் முன்பு அவரே நம் வீட்டுக்கு வந்து நிற்பார், கையில் புதிய நோட்டுக்களோடு. 

நம் தரித்திரத்தின் அளவைக் கூட்டியும் பெருக்கியும் சொல்லி, பதினைந்து வாங்கி, அதில் பத்தை நமக்கும், ஐந்தைத் தனக்கும் அவர் வைத்துக் கொண்டது கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் தெரியவரும். கோபிக்கவா முடியும்! அவசரத்திற்கு உதவினாரே!

சிலர் இருக்கிறார்கள். அபாரமான மறதி உடையவர்கள். தம்முடைய வீட்டு விசேஷங்களுக்கு நம்மிடம் நூறு முறை நினைவூட்டுவார். நம்முடைய விசேஷங்களுக்கு வரமாட்டார். முதல்நாள்தான் அவருக்கு வேறு வேலைகள் வந்துவிடும். 

தன் அலுவலகத்தில் நடந்த விழாக்களைப் பற்றி எந்தப் பத்திரிகையில் வந்தாலும் வெட்டிக் கொண்டுவந்து காட்டுவார். நம்மைப் பற்றி அதே பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியை ‘நான் பார்க்கவே இல்லையே’ என்று அதிசயிப்பார். 

அடுத்த மாதம் வெளிநாடு போவதாகச் சொன்னால் போதும், அடுத்த வாரமே நாம் போகப்போவதாகச் செய்தியைப் பரப்பிவிடுவார். நம்மைப் பார்க்க வருவதாகச் சொன்ன நண்பர்கள் வாராமல் போய்விடுவார்கள். வழியில் நிறுத்திக் கேட்டால் மறந்துவிட்டேனே என்று அசடு வழிவார்.

வெளிநாடு என்றதும் ஞாபகம் வருகிறது. வெளிநாடு போய்விட்டுத் திரும்புகிறவர்கள், விமான நிலையத்தில் டியூட்டி-ஃப்ரீ ஷாப்பில் வெளிநாட்டு மதுவகைகள் வாங்கிவர அனுமதியுண்டு. ஒரு டிக்கட்டில் இரண்டு பாட்டில்கள் வாங்கலாம். 

ஒரு நண்பர் இருந்தார். அடிக்கடி வெளிநாடு போவார். வரும்போது பாட்டில்கள் வாங்கிவருவார். குளிர்பெட்டியில் அடுக்கி வைப்பார். தமது குடியிருப்பில் யார்யார் உயர்ரக மதுவகைகளை விரும்பிக் குடிப்பார்கள் என்று அவருக்கு நினைவில் இருக்கும். அதிலும், பிறந்தநாள், திருமணநாள், நண்பர்கள் கூடும்நாள் போன்றவை யாரால் எப்போது கொண்டாடப்பட உள்ளது என்பதையும் குறித்துவைத்திருப்பார். சரியான நேரத்தில் அவர்களிடம் தகவல் தெரிவிப்பார். வாங்கியவிலைக்கு ஐந்து டாலர் அதிகம் வைத்து விற்றுவிடுவார். 

பேரம் பேசுபவர்களும் உண்டு. அவர்களைத் தன் நினைவுப் பலகையில் இருந்து மறதிப் பலகைக்கு மாற்றிவிடுவார். அவர்களுக்கு இனிமேல் இவர்மூலம் வெளிநாட்டு மதுவகைகள் கிடைக்காது. வேறு வழியின்றி இவர் சொல்லும் விலைக்கே வாங்கியாக வேண்டிய மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள். உடனே அவர்கள் பெயரை மீண்டும் நினைவுப் பலகைக்கு மாற்றிக்கொள்வார்.

இரயில் நிலையத்தில் ஒருநாள். வண்டி கிளம்ப இன்னும் அரைமணி நேரம் இருந்தது. உரிய பெட்டியில் ஏறி அமர்ந்தேன். அப்போது சன்னல் வழியாக ஒருவர் ‘சார், வணக்கம்’ என்று சொன்னார். பெட்டியை உயரே வைத்துவிட்டு சன்னலை நோக்கினால், சன்னல் அருகில் நின்றவர்களின் தலை மறைப்பில் அவர் எங்கோ மறைந்துபோனார். யாராயிருக்கும் என்ற ஆவலில் பக்கத்து இருக்கையரிடம் பெட்டியைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் கீழே இறங்கினேன். 

அவர் அதற்குள் நாலு பெட்டிகளைக் கடந்து போய்க்கொண்டிருந்தார். ஓடிச் சென்று பிடித்தேன். ‘வணக்கம், நீங்கள் யார்?’ என்றேன்.

‘என்ன சார் மறந்துவிட்டீர்களா? போன மாசம் நம்ம வீட்டு கிருகப்பிரவேசத்திற்கு வந்திருந்தீர்களே, பெங்களூர் போகிறீர்களா’ என்று கேட்டுக்கொண்டே தன்பாட்டுக்கு அவருடைய பெட்டியில் ஏறிக்கொண்டார்.

பெங்களூர் மெயிலில் போனால் பெங்களூர்தானே போகமுடியும்! மேலும், கடந்த ஐந்து வருடங்களில் எந்த ஒரு கிருகப்பிரவேசத்திற்கும் நான் போனதில்லையே, இவர் யாராயிருக்கும்?

ஞாபக மறதி. யாரையோ நினைத்து யாரையோ அழைத்திருக்கிறார் போல.

அதற்குள் கூட்டம் அதிகமாக என்னைக் கடந்துசெல்லவும், நான் விரைந்துசென்று என் பெட்டியில் ஏறினேன். நல்லவேளை பெட்டி பத்திரமாக இருந்தது. பக்கத்து இருக்கையரைத்தான் காணவில்லை. மறதியாக வேறு பெட்டியில் ஏறிவிட்டாரோ?

வண்டி கிளம்புவதற்கான ஊதல் முழங்கும் கடைசி நேரத்தில் அவர் வந்துவிட்டார். என்னைப்  பார்த்துப் புன்னகைத்தார். 'நண்பர்  எஸ்-12 இல் வருகிறார். ஃபாரின் போயிருந்தார். இது அவருடைய கிஃப்ட்' என்று ஓர் உயர்வகை மதுப்புட்டியைக் காட்டினார்.

டக்கென்று எனக்குப் பொறி தட்டியது. அடுத்த முறை வெளிநாடு போய்வரும்போது தனக்கும் அதேபோன்ற இரண்டு புட்டிகள் வாங்கிவரவேண்டுமென்று ஒரு நண்பர் சொல்லியிருந்தது  ஞாபகம் வந்தது. 

நல்ல நினைவாற்றல் கொண்டவர்.  நம் பெயரையும் திரும்பிவரும் தேதியையும் தன் நினைவுப்பலகையில் பத்திரமாகப் பதித்து வைத்திருப்பார். மறந்துவிட்டது என்று சாக்குபோக்கெல்லாம் சொல்ல முடியாது. ரொம்ப நல்லவர். அன்பானவர். அவருக்குச் செய்யாமல் இருக்க முடியுமா?      

நினைக்கத்தெரிந்த மனமே பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்
***
© Y Chellappa
================================================================
எழுத்தாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
================================================================
படைப்பு குழுமம்

படைப்பின் இலக்கிய விருது - 2016
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...
நமது படைப்பு குழுமம் இப்போது அடுத்தகட்ட நகர்த்தலுக்கு உயர்கிறது. ஆம் இனி ஒவ்வொரு வருடமும் தமிழில் சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவிக்க இருக்கிறது...
நமது படைப்பின் இலக்கிய விருதுக்கான விளக்கங்கள்/தகவல்கள் மற்றும் விருதுக்கான வடிவமைப்பை(டிசைன்) ஆகியவற்றை இதன் முந்தய அறிவிப்புகளில் பார்த்தோம்.
இப்போது இந்த விருதுக்கான முக்கிய அம்சமாக கருதப்படும் விதிமுறைகளை பார்ப்போம்.
தயவுசெய்து கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட்ஸ் அல்லது தகவல் பகுதியில் கேட்கலாம். உடனுக்குடன் தெளிவு படுத்தப்படும்.
விருதுகளின் பட்டியல்:
~~~~~~~~~~~~~~~~~~~~~
1 .சிறந்த கவிதை (கவிதை தொகுப்பு).
2 .சிறந்த சிறுகதை(சிறுகதை தொகுப்பு)
3 .சிறந்த நாவல்/குறு நாவல்
4 .சிறந்த கட்டுரை/வாழ்வியல் தொடர்.
இனி ஒவ்வொரு வருடமும் தமிழில் சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவிக்க இருக்கிறது நம் படைப்பு குழுமம்.
இது முற்றிலும் நூல் வெளியிட்டவர்களுக்கான ஒரு அங்கீகார விருது. தமிழர்களுக்கு தமிழர்களாலேயே தேர்வு செய்து கொடுக்கப்படும் தன்னிகரற்ற உயரிய விருது இதுவாக இருக்க போகிறது.
விதிமுறைகள்:
~~~~~~~~~~~~~~
1. இந்த நான்கு பிரிவுகளில் படைப்பாளிகள் வெளியிட்ட நூல்களுக்கு அந்தந்த பிரிவில் உயர்ந்த/சிறந்த எழுத்தாளர்களின் குழுவு கொண்டு ஆய்வு செய்து சிறந்த நூல்களை தேர்வு செய்யப்படும்.
2. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்ததாக தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு அந்த ஆண்டின் படைப்பின் இலக்கிய விருது (சிறந்த நூல் என தேர்வு செய்து) வழங்கப்படும்.
3. அப்படி தேர்வாகும் நூல் ஆசிரியருக்கு நாம் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழாவில் பரிசும் விருதும் அளித்து சிறப்பிக்கப்படும்.
4. 2016 ஜனவரி முதல் தேதி தொடங்கி 2016 டிசம்பர் கடைசி தேதி வரை வெளியிடப்பட்ட நூலாக இருக்க வேண்டும்.
5. ஆண் பெண் இருவருமே போட்டியில் கலந்து கொள்ளலாம் ஆனால் தனி தனி பிரிவுகள் எல்லாம் இல்லை. ஒரே பிரிவின் கீழ் அவர்களது படைப்புகள் பரிசீலிக்கப்படும். மேலும் இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம்.
6. புத்தகம் முதற் பதிப்பாக இருத்தல் அவசியம். கவிதை கதை நாவல் கட்டுரையென எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அப்படி வெளிவந்த நூல்களின் மூன்று பிரதிகளை நாங்கள் குறிப்பிடும் விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.
7. எழுத்தாளரின் புகைப்படம், முகவரி, நூலாசிரியர் பற்றிய குறிப்புகளுடன் கொரியர் செய்ய வேண்டும்.
இது தமிழகத்திறகு மட்டும் அல்லாது உலகளாவிய போட்டியாக இதனை நடத்த இருக்கிறோம் ஆதலால் புத்தகத்தை உலக கவிஞர்கள் யார் வேண்டுமென்றாலும் அனுப்பலாம். ஒரே நிபந்தனை பதிப்பு மொழி தமிழாக இருத்தல் அவசியம்.
8. அவர் அவர் சொந்த படைப்பான புத்தகத்தை மட்டுமே அனுப்ப வேண்டும் பரிந்துரைகள் கிடையாது.
9. புத்தகத்தில் உள்ள கதை கவிதை நாவல்கள் மொழிபெயர்ப்பு செய்யபட்டவையாக இருத்தல் கூடாது.
புத்தகம் தமிழில் தான் இருக்கவேண்டும்.பிறமொழி புத்தகத்தை அனுப்ப கூடாது.
10. புத்தகம் சொந்த பதிப்பாகவோ அல்லது பதிப்பகத்தின் மூலமாகவோ வெளியிட்டு இருக்கலாம். நூல் ஆசிரியர் அனுப்ப இயலாத பட்சத்தில், அந்த நூல் பதிப்பகத்தில் பதிக்கப்பட்டதாக இருப்பின் பதிப்பகத்தாரும் நேரடியாக நூல்களை அனுப்பலாம்.
11. புத்தக வெளியீட்டாளர் அயல் நாட்டில் இருப்பின் அவர்களின் புத்தகம் அவர்களின் சார்பாக அவர்களின் உறவுகள் யாராவது முன்வந்து அனுப்பலாம்.
12. பாரபட்சமின்றி புத்தகத்தை தேர்வு செய்து போட்டியின் முடிவு வெளியிடப்படும். அதில் எந்த சிபாரிசும் அல்லது இடையூறும் இல்லாத வண்ணம் மிக நேராமையானதொரு தேர்வாக இது இருக்கும் என உறுதியளிக்கிறோம். படைப்புகுழுவின் தேர்வு குழுமத்தின் முடிவே இறுதியானது.
13. பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட நூல்கள் தேர்வு பெற்றால் பதிப்பகத்தாருக்கும் தனியாக சிறப்பு பரிசு உண்டு.
14. இன்றிலிருந்து தொடங்கி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை உங்கள் நூல்களை குறிப்பிட்ட விலாசத்திற்கு வந்து சேர வேண்டும். அதற்கு மேற்பட்டு வரும் நூல்களை பரிசீலிக்க இயலாது.
15. அனுப்பப்படும் நூல்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்ப அனுப்ப இயலாது. நூல்கள் வந்து சேர்ந்ததும் இங்கே உடனுக்குடன் வந்து சேர்ந்த நூல்களின் பட்டியல் தயார்செய்து உடனுக்குடன் வெளியிடப்படும்.
இம்மாதிரியான இலக்கிய விருதுகள் தமிழ் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளுக்கு ஒரு தமிழ் அகாடமி விருதின் தரத்துக்கு உயர்த்தப்படும்.
அவ்வளவு நுட்பத்துடன் ஆய்வு செய்து இவ்விருதினை தேர்வு செய்ய இதற்காகவே ஒரு மிக பெரிய கவிஞர்களின் தலைமையில் ஒரு தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம்.
முடிந்தவரை பகிருங்கள் தோழர் தோழமைகளே... பயனடையும் படைப்பாளிகள் உங்களை நினைவு கூறும் தருணம் இதுவாக கூட இருக்கலாம் மேலும் உங்களால் ஒரு படைப்பாளி வெளிச்சத்திற்கும் வரலாம்..
படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய முகவரி:
------------------------------------------------------------------------
படைப்பு குழுமம்,
#8, சுபைதா இல்லம்,
மதுரை வீரன் நகர்,
கூத்தப்பாக்கம்,
கடலூர்.
607 002.
Address in English format:
-------------------------------
PADAIPPU KUZHUMAM,
#8, SUBAITHA ILLAM,
MATHURAI VEERAN NAGAR,
KOOTHAPPAAKKAM,
CUDDALORE,
TAMIL NADU, INDIA.
607 002.
Ph: 9739 544 544
Email: padaippu2016@gmail.com
படைப்புகள்/நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 30-APR-2017
நூல்களை அனுப்புவோர் தங்கள் கொரியர் தகவல்களை மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகிறோம். எங்களுக்கு கிடைத்தவுடன் மின்னஞ்சலிலும் இங்கே தகவல் பெட்டியிலும் தெரிவிக்கப்படும்.
வாருங்கள் வருங்காலத்தில் தமிழ் இலக்கியத்தை ஒரே குடையின் கீழ் நின்று பாதுகாப்போம்.அதற்கான அங்கீகாரத்தை அளித்து படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவோம்.
==============================================   

29 கருத்துகள்:

 1. நினைத்தலும் மறத்தலும்
  மனித மனத்தின்
  இரண்டு பெரும் கடமைகள் ஆகும்.
  உள்ளம் விரும்பும் எதுவும்
  நினைவில் உருளும்
  அடிக்கடி மீட்டுப் பாராதது
  மறக்க நேரிடும்
  சிந்திப்போம்
  நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 2. ...பல இடங்கள் சிரிப்பை வரவழைத்தது....சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.....

  பதிலளிநீக்கு
 3. தகவலுக்கு நன்றி சார் எங்கள் தளத்திலும் பகிர்கிறோம். இணையம் பிரச்சனை தொடர்வதால் கருதத்துகள் கூட அலைபேசி வழியாகத்தான் அடிக்க முடிகிறது....பதிவுகளும் வெளியிடத் தாமதமாகிறது....

  பதிலளிநீக்கு
 4. இது மாதிரி சுவாரஸ்யமான (கடன்) அட்டை நண்பர்கள் எல்லோருக்குமே இருப்பார்கள்!! மிக இனிய பாடலையும் நினைவு படுத்தியிருக்கிறீர்கள்.

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடன் அட்டை நண்பர்கள்..அதாவது CREDIT CARD FRIENDS? பொருத்தமான பெயர் வைத்தீர்கள்!

   நீக்கு

 5. அருமையன அறிவியல் சார்ந்த பதிவு . மகாபாரதத்தில் குந்தி வாடகை தாயா? திருசங்கு சுவர்க்கம் கதை செய்மதியை விஸ்வமித்திரர் உருவாகினார் என்கிறதா?. எனக்கு தெரிந்த ஒரு புல்லாங்குழல் வாசிப்பவர் தனது மனைவி கருவுற்று இருந்த போது அவர் தினமும் தன் மனைவியின் வையிறுக்கு அருகே புல்லாங்குழல் வாசிப்பார். குழந்தை பிறந்து புல்லாங்குழல்வித்துவான் ஆயிற்று. இதே போல் ஒரு கறுப்பின பெண் கருவாகி இருக்கும் போது கலண்டரில் உள்ள அழகிய வெள்ளை இனக் குழந்தை போல் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைத்து வந்தாள். குழந்தையும் வெள்ளை நிறக் குழந்தையாக பிறந்தது. முடிவு கணவன் மனைவி மேல் சந்தேகப்படத் தொடங்கினான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வரவுக்கும் புதிய இரண்டு தகவல்களுக்கும் நன்றி.

   நீக்கு
 6. அருமையான பதிவு ஐயா
  நினைவும் மறதியும்
  தேவைப்படும் பொழுது மகிழ்வோடு ஒட்டி உறவாடுபவர்களும்,
  தேவையில்லை என்றால் நாம் இருப்பதையே அறியாதவர்கள் போல் நடந்து கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 7. அறிவியலையும் புராணத்தையும் இணைத்து சொன்னவிதம் அழகு நண்பரே...

  பதிலளிநீக்கு
 8. சில நேரங்களில் சில மனிதர்கள்

  பதிலளிநீக்கு
 9. இப்படிக்கூட உண்டா. அதிசயமாக இருக்கிறது.
  மிக இனிமையான பாடலை நினைவு செய்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 10. சுவாரஸ்யமான பதிவு. சிலர் நம்மிடம் ஒரு சிறு தொகையாக கடன் கேட்டு வாங்குவார்கள். கொடுத்து விடுவார்க்ச்ள். மறுபடியும் கேட்பார்கள். வாங்கியதை கொடுத்து விடுவார்கள். தொடர் தொல்லை. அந்த பணம் கடைசிவரை நமக்கு சொந்தம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. அதுபோல் நானும் சில பல தொகைகளை இழந்திருக்கிறேன். தங்கள் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 11. என்ன ஆயிற்றோ தெரியவில்லை பின்னூட்டம் இட முடியாமல் எழுத்துருக்கள் சலிப்பூட்டுகின்றன. இதையே வேர்ட் ஃபைலில் எழுதி காப்பி பேஸ்ட் செய்கிறேன் பின்னூட்டத்தில் நேரடியாக எழுத முடியவில்லை. மறதி என்று சொல்லும் போது அது நாம் சிரத்தையாக கவனத்தில் கொள்ளாததால் வருவது என்றே தோன்றுகிறது. வேண்டுமாமானால் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியுமாமே


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. google blogspot இல் எழும் பிரச்சினைகளை யாரும் சரிசெய்வதில்லை. தானாகவே அவை சரியாகும்வரை போருத்தும்மொல்லா வந்டியதுதான...!

   நீக்கு
 12. எத்தனை வித மனிதர்கள்? என் அப்பா, சின்ன வயதில், நான் ஹாஸ்டலில் சேரும்போது சொன்னார்... யாரேனும் கடன் கேட்டால், 2 ரூ மட்டும் கொடு (80களில்). நிச்சயம் திருப்பித் தர மாட்டேன்.. திருப்பியும் கடன் கேட்டு வரமாட்டான் என்று. எனக்கு 'கடன்' கொடுப்பதும், வாங்குவதும் அலர்ஜி. அதனால் கிரெடிட் கார்டுகூட இல்லாமல் இத்தனை வருடங்கள் ஓட்டிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னது, கடனட்டை இல்லாமால் வாழ்கிறீர்களா! என்ன ஆச்சரியம், என்ன வினோதம்! நீங்கள் உண்மையிலேயே கோடீஸ்வரராகத் தான் இருக்கவேண்டும்!

   நீக்கு
 13. #CREDIT CARD FRIENDS#
  cctv கேமராவில் இருந்தும் தப்பித்து விடலாம் ,இந்த ccfகளிடம் இருந்து தப்பவே முடியாது :)

  பதிலளிநீக்கு
 14. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. நான் அனுப்பும் பின்னூட்டங்கள் வருவதில்லை. உங்களுடைய கூட பின்னூட்டம் இட்டிருந்தேன்.என்னவாச்சு என்று தெரியவில்லை. anyway நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டிருக்கும் பதிவு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Blogspot இல் திடீர் திடீரென்று இப்படித்தான் பிரச்சினைகள் முளைக்கின்றன. பிறகு தானாகவே சரியாகின்றன..

   நீக்கு
 15. ஒவ்வொன்றையும் மிக அருமையாக, அனுபவித்து அலசி எழுதியுள்ளீர்கள். ஒவ்வொரு வரியையும் படிக்கப் படிக்க என் முகத்தில் ஓர் புன்னகை.

  தலைப்புத் தேர்வும், அந்த காலத்தால் அழியாத பாடல் தேர்வும், அதையொட்டி சொல்லியுள்ள செய்திகள் அட்டகாசமாக உள்ளன.

  இதுபோல பலதரப்பட்ட ஆட்களை நானும் என் மிகப்பெரிய அலுவலகத்தில் சந்தித்துள்ளேன்.

  எனக்குத்தெரிந்த நல்லவர் + இரக்க சுபாவம் உள்ள ஒருவரிடம், ஒரு குடிகாரர் ஏதேதோ சொல்லி மாதக்கடைசியில் ரூ.1000 கேட்டு பணம் வாங்கிக்கொண்டார். அடமானம் போல சம்பளப்பணத்தில் எடுத்துக்கொள்ளவும் எனச்சொல்லி, பாஸ்புக்குடன் + ரூ. 1000க்கான இருபுறமும் கையெழுத்திட்ட செக் எல்லாமே அழகாகக் கொடுத்துச்சென்றார்.

  பணம் கொடுத்த இவரும் சம்பளதினத்தில் பேங்குக்குச் சென்றார். பாஸ் புக் எண்ட்ரி செய்ததில், சம்பளப்பணமும் சேர்த்து மொத்தப்பணமே ரூ. 950 தான் இருந்தது. அதனால் ரூ. 1000 க்கான செக்கை இவரால் பணமாக்க முடியவில்லை.

  தன் சொந்தப்பணத்தில் ரூ.100 க்கு ஒரு Cash Pay-in-slip எழுதி அந்தக்குடிகாரன் கணக்கில் கட்டிவிட்டு, அதன் பிறகு அந்தச் செக்கைப் பணமாற்றிக்கொண்டு வந்தார். அது ஊழியர்களுக்கான ஒரு கோ-ஆப்ரேடிவ் பேங்க். அப்போதெல்லாம் ஊழியர்கள் கணக்கில் மினிமம் பேலன்ஸ் ஆக ரூ 50 இருந்தால் மட்டுமே போதும்.

  அவரிடம் நான் ஏன் சார் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்டேன்.

  அதற்கு அவர் சொன்னார்: ரூ. 1000 க்கு ரூ.900 மாவது திரும்பிக்கிடைத்ததே .... இதுபோலச் செய்யாவிட்டால் நான் கொடுத்த ரூ 1000 த்தையும் நான் இழக்க வேண்டி வரும். இதுபோல அவன் எவ்வளவு பேரிடம் எவ்வளவு செக்குகள் கொடுத்து கடன் வாங்கியிருக்கானோ? நான் முந்திக்கொண்டு பேங்குக்குப்போய் புத்திசாலித்தனமாக ரூ.
  1000-100 = 900 ஐ யாவது பெற்றுக் கொண்டு வந்து விட்டேனாக்கும்” என்றார்.

  இதுபோல உலகில் ஏமாற்றுபவர்கள் அதிகம்தான். ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் உஷாராகத்தான் இருக்க வேண்டியுள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் விரிவான பின்னூட்டத்திற்கும் சின்னமீனைப் போட்டு சற்றே பெரியமீனைப் பிடித்த வாழ்வியல் நிகழ்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு