கம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 24, 2013

கம்பன் புகழ் பாடிய கம்யூனிஸ்ட் அறிஞர் "எஸ்.ஆர்.கே." நினைவு நாள் (ஜூலை 24)


மனைவி டாக்டர் கமலாவுடன் டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் 

தஞ்சை மாவட்டம் கிளிமங்கலத்தில் பிறந்த எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சிறுவயதில் இருந்தே பத்திரிகையாளனாக வேண்டும் என்ற கனவு இருந்தது. 13வது வயதில் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் சென்னைக்கு ரயிலேறி, ஆனந்தவிகடன் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது ஆசிரியராக இருந்த ‘கல்கி’, ஆச்சரியத்துடன் இவரைப் பார்த்து, ‘நீ சிறிய பையனாக இருக்கிறாய், படிப்பை முடித்துக்கொண்டு வா’ என்று திருப்பி அனுப்பிவிட்டார்.