பன்னாட்டு நிறுவனங்களின்
மனித உரிமை மீறல்கள் (2)
நைஜீரியாவில் ‘ஷெல்’(SHELL)லின் சாகசங்கள்
இயற்கை தன்
வளங்களையெல்லாம் பூமிக்கடியிலும் கடலுக்கடியிலும் புதைத்து வைத்திருக்கிறது.
தங்கமாகவும், வைரமாகவும், இரும்பாகவும், பெட் ரோலிய எண்ணெயாகவும் ஒளிந்து
கிடக்கும் இவற்றை யாரும் எளிதில் திறந்து பார்த்துக் களவாடிவிடக்கூடாது என்னும்
கருத்தில் தானோ என்னவோ தொழில்நுட்ப அறிவு, பொருள்வளம், மானிடத்திறமை போன்ற வசதிகள்
இல்லாத ஏழை நாடுகளுக்கே இவற்றை பெரும்பாலும் வழங்கியிருக்கிறது. மத்திய
கிழக்காகட்டும், ஆஃப்ரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளாகட்டும் இத்தகைய PARADOX OF PLENTY
என்னும் சிக்கலில் வீழ்ந்திருக்கின்றன. தங்கள் நாட்டு வளங்களை
வெளியில் எடுத்துத் தங்களுக்குப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளவும் பிறநாடுகளின்
பன்னாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.
![]() |
| கென் சாரோ விவா |
பெரும்பாலும் இந்நாடுகள், குடியரசோ,
அல்லது நேர்மையான சர்வாதிகாரமோ இல்லாத நாடுகளாக அமைந்தது, பன்னாட்டு
நிறுவனங்களுக்கு மிகுந்த சாதகமாயிற்று. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சிலரையோ,
அல்லது ஓர் அரச குடும்பத்தையோ திருப்திப்படுத்தினால்
