(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும்
வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ
அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல்
கலைஞர் – பேராசிரியர் புகைப்படம்.
தமிழ் இந்துவில் வந்தது. என்ன பேசியிருப்பார்கள்? ஒரு கற்பனை:
“கவலைப்படாதீங்க தலைவரே! நான்
அரக்கோணம் மீட்டிங்க்குப் போய் வந்துடறேன். அதுக்குள்ள ஒங்களோட மேல்சட்டையும், மஞ்சள் துண்டும் திரும்பக் கெடைக்கலேன்னா, போலீஸ்ல கம்ப்ளைன்ட்டு கொடுத்திரலாம், சரியா?”
‘விஷ்ணு’வின் அரசியல்
கார்ட்டூன்கள்
தினமலரில் நாள்தோறும் ‘தேர்தல்களம்’
என்ற பெயரில் எட்டுபக்க இணைப்பு வருகிறது. அதன் கடைசி பக்கத்தில் ‘விஷ்ணு’ என்ற
ஓவியர் அற்புதமாகக் கார்ட்டூன் வரைந்துவருகிறார். கோட்டுச் சித்திரங்களில் ‘கோபுலு’
மாதிரி, அரசியல் கார்ட்டூன்களில் விஷ்ணுவைச் சொல்லலாம் என்றால் சரியாகாது. அதை
விடவும் உயர்வாகச் சொல்லவேண்டும். அவ்வளவு தரமான ஓவியம். அவ்வளவு தரமான
கற்பனைத்திறன். தமிழுக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான ஓவியரான விஷ்ணுவுக்கு நமது
வாழ்த்துக்கள்!
கடந்த சிலநாட்களில் அவர் வரைந்த
சில கார்ட்டூன்களை, தினமலருக்கு நன்றி
சொல்லி, இங்கு தருகிறேன்: இவற்றை நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கலாம். அதனாலென்ன, நல்லவற்றை எத்தனை முறைதான் பார்த்தால் என்ன?
காங்கிரஸ் கட்சிக்கு:
திமுகவிற்கு:
அ.இ.அ.திமுகவிற்கு:
தே.மு.தி.க.விற்கு:
பா.ம.க.விற்கு:
ஆம் ஆத்மி கட்சிக்காக:
போனசாக இன்னும் சில:
காங்கிரசுக்காக:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்காக:
தி.மு.க.விற்காக:
புத்தகம்
பத்து வருடம் முன்பு புதுடில்லி சென்றிருந்தபோது
நண்பர் ஷாஜகான் எனக்குப் பரிசளித்த புத்தகம், ‘A DROP IN SEARCH OF THE
OCEAN’ – Best Poems of Vairamuthu. (Rupa & Co, Ansaari Road, DaryaGanj,
New Delhi-110002 Rs.395)
புத்தகங்களை அச்சடுக்கி, வடிவமைக்கும் தொழிலில்
சிறந்துவிளங்கும் ஷாஜகான்தான் இந்த நூலையும் தயாரித்திருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் தேர்ந்தெடுத்த கவிதைகளைத்
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருப்பவர், பாலன் மேனன் என்னும் கனடா வாழ் கல்வியாளர்.
ஆங்கில மொழிபெர்ப்பில் படிக்கும்போது பல பாடல்கள்
வெற்று உரைநடை போலவே தெரிகின்றன. காரணம், சரியான பாடல்கள் தெரிவுசெய்யப்படாமையே.
சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்! அதன்றியும், கவிதையைத்தான் மொழிபெயர்க்கலாம், கவிதையுணர்வை மொழிபெயர்க்கமுடியாதல்லவா?
வைரமுத்துவின் சிறப்பே, வார்த்தை ஜாலங்கள்தானே!
‘பனிவிழும் மலர்வனம்’ என்ற சொற்றொடரை அதே கவித்துவம் வெளிப்படுமாறு
இன்னொரு மொழியில் பெயர்ப்பது எப்படி? மேலும், மொழிபெயர்ப்பாளன் ஒரு கவிஞனாக
இருந்தாலொழிய, மொழிபெயர்ப்புக் கவிதை வெற்றி பெறுவது கடினமே.
அதனால்தான், வெளிவந்து பத்தாண்டுகளுக்கு
மேலாகியும் இந்த நூல் வைரமுத்துவைப் பற்றி ஆங்கில எழுத்துலகில் எதிர்பார்த்த
வரவேற்பைப் பெறவில்லை போலும். ஆனால், அது வைரமுத்துவின் கவித்திறனுக்கோ, புகழுக்கோ
எந்த வகையிலும் குறைவை ஏற்படுத்திவிட முடியாது. பாரதியாரின் கவிதைகளுக்கே இன்றுவரை
விரும்பத்தக்க ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லையே! கண்ணதாசனுக்கும் அதுபோலவே.
என்றாலும், சில பாடல்கள் மொழிபெயர்ப்பிலும்
சிறப்பாகவே தென்படுகின்றன. பாலன் மேனனுக்கு நமது பாராட்டுதல்கள். (இவற்றின் தமிழ் மூலம் எதுவென்று நீங்களே
கண்டுபிடித்துக் கொள்ளவேண்டியதுதான்.)
LAST WILL
After I am gone
my friends will
aver
that even my
sneezing
was music
After I am gone
my foes will
carp
that all my
music
was but sneezing
My sons, you point out
that both are
overstatements
**
Declare you
that he
believed not
in the lines on
the palm
That he was one
who toiled and
toiled
until the lines
on the palm blurred
**
Write that
no angel
blessed him
But that
of his tears
and his blood
he composed the
ink
to create his
poetry
**
THE OVERAGED MAIDEN
In the faint furrows
on my cheeks
lie the coffins
of my dreams
A silver hair
straggling on
my cheek
says unto my
ear:
“Which of these
will cease
first:
menstruation
or breath?”
**
LIFE AT CALLING DISTANCE
You
who, setting
out to commit suicide,
were rejected
by death
and disgorged
back into life
Pray, tell….
**
Earth has not
abandoned you,
man.
Does the breeze blow
excluding you?
Has the moon
stopped casting
its beams on
you?
Have the flowers
cowered behind
the leaves
on seeing you?
Life welcomes you
to live
on its
pinnacles
Why dig you then
with your nails
the vale of
death?
ஐரோப்பாவில் உள்ள சின்னச் சின்ன நாடுகளில் கூட,
அவர்தம் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்குக் கொண்டுசெல்லும் மொழிபெயர்ப்புத் திறமை
வளர்ச்சி கண்டுள்ளது. தமிழில் இன்னும் அந்த நிலைமை வரவில்லை என்பது
வருத்தமளிக்கிறது. ‘கிழக்கு’ பத்ரி
சேஷாத்ரி கூட இதுபற்றி எழுதியிருந்தார். அசோகமித்திரன், ஆதவன், இந்திரா
பார்த்தசாரதி போன்றவர்களின் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்வித்து
வெளியிட்டிருக்கிறார். ஆனால் அதற்குரிய சந்தைப்படுத்தல் திருப்தியில்லாமையால்
இனிப் புதிய மொழிபெயர்ப்புகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதில்லை என்று தொனிக்கும் விதமாக
எழுதியிருந்தார். அரசியல் செல்வாக்கு, சினிமா என்ற இரட்டைக் குதிரை பூட்டிய
சாரட்டில் வலம்வரும் வைரமுத்துவுக்கே இந்த
கதி என்றால், வெறும் எழுத்தை மட்டுமே
நம்பி வாழ்க்கை நடத்தும் சாமான்ய எழுத்தாளனின் புத்தகங்கள் உலகின் கவனத்திற்கு
வருவது எப்படி? ‘விதியே, விதியே, தமிழச் சாதியை என் செயக் கருதி இருக்கின்றாயடா!’
என்று பாரதியோடு சேர்ந்து பாடவேண்டியதுதானா?
சினிமா
அண்மையில் ‘பகல் நிலவு’ என்ற பழைய படத்தை
ஏதோ ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டாக’ அறிமுகமான
நடிகை ரேவதிதான் கதாநாயகி. என்ன அருமையான நடிப்பு!
அடுத்த நாள் இன்னொரு தொலைக்காட்சியில் ரேவதி
நடித்த ‘அஞ்சலி’ படம் வந்தது. அசாதாரணமான குழந்தையின் தாயாக வரும் ரேவதி,
தன் சின்னூண்டு முகத்தில் வெளிப்படுத்தும்
உணர்ச்சிகள் இருக்கின்றனவே, அப்பப்பா! இன்னொரு சிவாஜிதான் போங்கள்!
அற்புதமான நடிப்புத்திறமையும் குத்துவிளக்கு
மாதிரி அழகும் உடைய நடிகைகளுக்குக்கூட வயதாகிவிடுவதுதான் மனித வாழக்கையின்
துர்ப்பாக்கியம்.
ரேவதி - இப்போது |
தொலைக்காட்சி :
‘மகான்களும் அதிசயங்களும்’ என்ற தொடர், விஜய் டிவியில் மாலையிலும்
காலையிலும் வருகிறது. கிரி டிரேடிங் கம்பெனி வழங்கும் ஆன்மிகத் தொடர்.
நூறாண்டு
வாழ்ந்து நம்மிடையே ‘நடமாடும் தெய்வம்’ என்ற வணக்கத்திற்குரிய புகழைப் பெற்ற மகாபெரியவரின்
சரித்திரம் இது. அவரோடு தொடர்புடைய பக்தர்களின் வாழ்வில் அவர் நிகழ்த்தியதாகச்
சொல்லப்படும் அற்புதங்கள் இத்தொடரின் உயிர்நாடி.
எனினும், கதாநாயகனாக நடிப்பவர்,
தனது முகபாவத்தில் இன்னும் அதிக உணர்ச்சி காட்டவேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால்
விரைவில் முன்னுக்கு வருவார் என்பது நிச்சயம்.
பத்திரிகை
ஸ்ரீரங்கநாதபாதுகா என்ற வைணவ சமய மாத இதழை அண்மையில் பார்த்தேன்.
(மார்ச் 2014 இதழ்.) நல்ல தமிழில் வைணவக் கருத்துக்களையும் அதே சமயத்தில்
ஆழ்வார்களின் பாடல் விளக்கத்தையும், திருமணத்திற்குக் காத்திருக்கும் ஆண்-பெண்
விவரங்களையும் காணமுடிந்தது. தெளிவான பெரிய எழுத்துருவில் அழகிய அச்சு.
(ஸ்ரீரங்கநாத பாதுகா – மாத இதழ், ஆண்டுச்சந்தா
ரூ.200. முகவரி:
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம், 31, தேசிகாச்சாரி சாலை, மைலாப்பூர், சென்னை –
600004 தொலைபேசி: 24993658.)
சிரிப்பு
எனது கார்ப்பொரேஷன் வங்கியின் அதிகாரிகள் சங்க
மாத இதழில் (OFFICERS’ VOICE - April2014) எனது நண்பர் எச்.எஸ்.விஸ்வநாத் வரைந்துள்ள
கார்ட்டூன்:
(வங்கியின் தலைவர், தனது செயலாளருடன் பேசுகிறார்:)
“சிக்கன நடவடிக்கை பற்றிய உங்கள் வரைவுக்கு என்
சம்மதம். ஆனால், நான் அமெரிக்கா சென்று, நமது
‘ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சித் திட்டம்’ மக்களின் மீது ஏற்படுத்திய
பாதிப்பைக் குறித்து ஆலோசித்து வந்தபிறகு, அதை அமல்படுத்த ஆரம்பித்தால் போதும்!”
நன்றி விஸ்வநாத்!
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால்,
கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’
அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.
© Y Chellappa
Email: chellappay@yahoo.com
பேராசிரியர்-கலைஞர் கற்பனை உரையாடல் பிரமாதம்.
பதிலளிநீக்குவிஷ்ணுவின் கார்ட்டூன்கள் பிரமாதம்.
மொழிபெயர்ப்பு பற்றி நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. அவை என்ன பாடல்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
தொலைக்காட்சித் தொடர் பார்த்ததில்லை. (ஆன்மிகம்)
நமது எழுத்துகளும் நாமே வைரம் என்று (ஆதங்கத்தை) நினைத்துக் கொள்ள(ல்ல) வேண்டிய தான்...
பதிலளிநீக்குரேவதி அவர்கள் முதல் படத்திலேயே அசத்தியவர்...
கலைஞர் – பேராசிரியர் : ஹா... ஹா...
கற்பனை உரையாடல் தான் இந்த வார அபுசி தொபுசியின் ஹைலைட்! நல்ல கற்பனை வளம் சார் உங்களுக்கு!
பதிலளிநீக்குவிஷ்ணுவின் கார்ட்டூன்கள் அசாத்தியமாக உள்ளது! அலுப்பதில்லை!
ரேவதி மிகத் திறமையான ஒரு நடிகை! மண் வாசனையிலேயே நன்றாகச் செய்தவர்! ஒருவேளை மலையாளக் கரையோரச் சிட்டுகள் எல்லாமே நன்றாக நடிக்குமோ?!!!
ஸ்த்ரீ தர்மம் இக்கால நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவருமா என்பது சந்தேகமே! வாழ்க்கை முறையும், வாழ்வியலும், நிறைய மாற்றங்களுக்கு உட்பட்டுவிட்டதே!
மொழிபெயர்ப்பு என்பது மிகவும் கஷ்டமானது! அதுவும் அசல் உணர்வைக் கொண்டுவருவது மிகக் கஷ்டம்! தாய்க்கும், மாற்றான் தாய்க்கும் உள்ள வித்தியாசம்! அந்தப் பாடல்கள் எந்தப் பாடல்கள் சார்? கண்டுபிடிக்க முடியவில்லை!
மொழிபெயர்த்த பாடல்களைக் கண்டுபிடிக்க வைரமுத்துவின் அசல் பாடல்கள் தெரிந்திருக்க வேண்டுமல்லவா, ? நல்ல மொழிபெயர்ப்பும் சந்தைப்படுத்தலும் இருந்தால் இலக்கியத்துக்கு நோபல் பரிசு கிடைத்து விடுமே. என் தளத்தில் ஒரு ஆங்கிலக் கவிதை கொடுத்திருக்கிறேன் தமிழில் மொழிபெயர்க்கவோ மொழியாக்கம் செய்யவோ வேண்டுகிறேன் இன்று காலை சுட்டியில் சொடுக்கினபோது பதிவில்லை என்று வந்தது.
பதிலளிநீக்குகார்டூன்கள் அருமை!
பதிலளிநீக்குரேவதியின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும் இன்னொரு படம், 'மறுபடியும்' .
பதிலளிநீக்குயாரானாலும் வயதாவதை யார் தடுக்கமுடியும்?
மொழிபெயர்ப்பு பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ரொம்பவும் உண்மை.
கார்டூன்கள் ரொம்பவும் ரசிக்க வைத்தன.
மொழிபெயர்ப்பு என்பது சற்றுக் கடினமானது. அதிலும் கவிதை மொழிபெயர்ப்பு என்பதானது மிகவும் கடினமானது. உணர்வுகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வெளிக் கொணர்வது சிரமமே. சற்றொப்ப அருகில் உள்ள பொருளைத் தரும் சொல்லையோ சொற்றொடரையோ பயன்படுத்தலாம். தவிரவும் எழுத்தாளரின் உணர்வுகளை மொழிபெயர்ப்பாளர் அப்படியே வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியம். அவ்வாறான சில முயற்சிகளில் ஈடுபட்ட அனுபவமே என்னை இவ்வாறு எழுதவைத்துள்ளது. நன்றி.
பதிலளிநீக்குகவிதை மொழிபெயர்ப்பு செய்யும்போது விதையான உயிர் ஊசலாடுவதாகத்தோன்றுகிறது..
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு