அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு இலக்கிய விருதுகள்
****
சிறுகதைப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வு -2025 ஜனவரி 17 வெள்ளிக்கிழமை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்றது.
அழைப்பிதழ் |
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பரிசு பெற்றவர்களுக்கு ஜிபே மூலம் பரிசுத்தொகை அனுப்பப்பட்டு விட்டது. (வெளிநாட்டு மூவரைத் தவிர).
முதல் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்த ரூ 5000 மங்கலகரமாக இருக்கவேண்டும் என்பதற்காக 5001 ஆகத் திருத்தப்பட்டது. இரண்டாம் பரிசு ஏற்கெனவே மங்கலகரமான ரூ 1001 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் பரிசுக் கதைகள் பத்தும் 'வேண்டுதல்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாகவும், இரண்டாம் பரிசுக் கதைகள் 25 ம் 'கரையேற்றம்' என்ற தலைப்பில் இன்னொரு தொகுப்பாகவும் வெளியிடப்பட்டன.
செயற்கை நுண்ணறிவினால் ஆக்கிய படம் |
இதுவும் செயற்கை நுண்ணறிவினால் ஆக்கிய படம் |
விழா நிகழ்வின் வீடியோ விரைவில் இங்கு வெளியிடப்படும். இதற்கிடையில் பரிசு பெற்ற எழுத்தாள நண்பர்கள் பலர் தத்தம் வலைப்பதிவுகளில் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.
இலக்கிய இதழ்கள் இந்த நிகழ்வை மனமுவந்து போற்றியுள்ளன. இன்று 'அமுதசுரபி' மாத இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரையின் படவடிவம் கீழே தரப்படுகிறது. அமுதசுரபி ஆசிரியர் மதிப்பிற்குரிய திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு நமது நன்றிகள். இக்கட்டுரையை வடித்த அன்பர் 'ஸ்ரீ' அவர்களுக்கும் நன்றி!