மார்ட்டின் லூதர் கிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்ட்டின் லூதர் கிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 18, 2022

அட்லாண்டாவில் ஓர் 'அரசனின்' மாளிகை

அட்லாண்டாவில் ஓர் 'அரசனின்'  மாளிகை   

(இன்று கிழமை செவ்வாய்-6)

(அட்லாண்டிக் கடலோரம்)

அமெரிக்காவில் 36 ஆவது நாள் 

அட்லாண்ட்டாவில் மகன் வீட்டில் பன்னிரண்டு நாட்கள் செலவழித்தபோது   மனநிறைவளித்த நிகழ்ச்சி, 1929ஆம் வருடம் ஜனவரி 15ஆம் நாள் அட்லாண்ட்டாவில் பிறந்து, 1968 ஆம் வருடம் ஏப்ரல் 4ஆம் நாள் கொலையாளி ஒருவனின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான காந்தீயப் போராளி, கறுப்பினத் தலைவர், மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) வீட்டில் சில மணி நேரம் செலவழிக்க முடிந்தது தான். 

மார்ட்டின் லூதர் கிங் நினைவகத்தில் உள்ள படம்