வெள்ளி, மார்ச் 29, 2013

சாகித்ய அகாதெமி: (6) போன 15

தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு சாகித்ய அகாதெமியின் பரிசு பெற்ற நூல்கள் மொத்தம் 15.

7 நாவல்களும், 7 கவிதைகளும் ஒரே ஒரு தன்வரலாறும் இவற்றில் அடங்கும். மொத்தம் 7 மொழிகளுக்கு இவை சென்றுள்ளன:


மலையாளம் 4
தெலுங்கு 4
கன்னடம் 2
ஆங்கிலம் 2
கொங்க்கணி 1
ஸமஸ்கிருதம் 1
வங்காளி 1
  15

திருக்குறள், தெலுங்கிலும், கொங்க்கணியிலும், கலித்தொகை மலையாளத்திலும், குறுந்தொகை சமஸ்கிருதத்திலும், குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி மலையாளத்திலும்,
சிலப்பதிகாரமும், சங்கப்பாடல்கள் தொகுப்பு ஒன்றும்
ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பரிசு பெற்றுள்ளன. (கீழே காண்க).
கவிதை 
1991 திருவள்ளுவர் திருக்குறள்
தெலுங்கு மொழிபெயர்த்தவர் திருக்குறள்
  சி.ஆர்.சர்மா  
1991 பல்வேறு புலவர்கள் கலித்தொகை
மலையாளம் மொழிபெயர்த்தவர் கலித்தொக
  எம். நாராயணங்குட்டி  
1995 இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம்
ஆங்கிலம் மொழிபெயர்த்தவர் The Tale of the Anklet
  ஆர். பார்த்தசரதி  
2004 குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி
மலையாளம் மொழிபெயர்த்தவர் குலசேகர ஆழ்வாருட 
  புதுசேரி ராமச்சந்திரன் பெருமாள் திருமொழி
2008 திருவள்ளுவர் திருக்குறள்
கொங்க்கணி மொழிபெயர்த்தவர் திருக்குறள்
  புருஷோத்தம் மல்யா  
2008 பல்வேறு புலவர்கள் குறுந்தொகை
ஸமஸ்கிருதம் மொழிபெயர்த்தவர் குறுந்தொகை
  ஏ. வி. சுப்ரமணியம்  
2012 பல்வேறு புலவர்கள் சங்கப் பாடல்கள்
ஆங்கிலம் மொழிபெயர்த்தவர் Love Stands Alone
  ம.இலெ.தங்கப்பா  

நாவல்களைப் பொருத்தவரை நல்ல எழுத்தாளர்களின் நூல்கள்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது (இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சிவசங்கரி, ஜெயகாந்தன், தோப்பில் முகமது மீரான் ). தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் தெலுங்கில்
பெயர்க்கப்பட்டு பரிசு பெற்றுள்ளது. (விவரம் கீழே).

நாவல் 
  படைப்பாளி நூலின் பெயர்
1991 இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல்
வங்காளி மொழிபெயர்த்தவர் ரக்தபன்யா
  எஸ். கிருஷ்ணமூர்த்தி  
1996 அசோகமித்திரன் பதினெட்டாவது அட்சக்கோடு
கன்னடம் மொழிபெயர்த்தவர் ஹதினெண்ட்டினெயெ அட்சரேகெ
  சேஷ நாராயணா  
1997 சுந்தர ராமசாமி ஜே.ஜே.சில குறிப்புகள்
மலையாளம் மொழிபெயர்த்தவர் ஜே.ஜே.சில குறிப்புகள்
  ஆற்றூர் ரவி வர்மா  
2005 தோப்பில் முகமது மீரான் கூனன் தோப்பு
மலையாளம் மொழிபெயர்த்தவர் கூனன் தோப்பு
  வேணுகோபால பணிக்கர்  
2007 சிவசங்கரி பாலங்கள்
தெலுங்கு மொழிபெயர்த்தவர் அந்த்தராலு
  மந்த்ரிப்ரகட சேஷாபாய்  
2010 ஜெயகாந்தன் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
தெலுங்கு மொழிபெயர்த்தவர் கல்யாணி
  ஜி.பாலாஜி  
2011 மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம்
தெலுங்கு மொழிபெயர்த்தவர் பிரதாப முதலியார் சரித்ரா
  எஸ். ஜயபிரகாஷ்  

லிவிங் ஸ்மைல் வித்யாவின் "நான்  சரவணன் அல்ல"என்ற
தன்வரலாறு தமிழ்ச்செல்வி என்பவரால்  மொழியாக்கம்
செய்யயப்பட்டு பரிசு பெற்றுள்ளது.
தன்வரலாறு
  படைப்பாளி நூலின் பெயர்
2011 லிவிங்கு ஸ்மைல் வித்யா நான் சரவணன் இல்லை
கன்னடம் மொழிபெயர்த்தவர் "நானு அவனல்லா, அவளு"
  தமிழ்ச்செல்வி  

பரிசு பெறாத மொழியாக்க நூல்கள் நிச்சயமாக அதிக
எண்ணிக்கையில் இருக்கக்கூடும். அவை பற்றி சரியான
தகவல்கள் முழுமையாக இல்லாத நிலையில் இந்த ஆய்வை
இத்துடன் முடித்துக்கொள்வதே நியாயமானதாகத் தோன்றுகிறது.

குறிப்பு:


'பன்மொழிப் பதிப்புத்துறை ஞாநி' என்று சொல்லத்தக்க எனது
தில்லி நண்பர், கவிஞர்  'புதியவன்' ஷாஜகான், 'தில்லி(Guy)கை' 
நிகழ்ச்சி யொன்றை முன்னிட்டு,   அவர்  தயாரித்து வழங்கிய
 உரையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்:

 http://pudhiavan.blogspot.in/2012/07/blog-post_15.html

எத்தனை மணி நேர உழைப்பின் பயன் இந்த உரை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய மொழிகளுக்கிடையே இருந்த பரஸ்பர மொழியாக்கம் பற்றி நிறைய தகவல்கள் இதில் உள்ளன. மறவாமல் படியுங்கள்.
******
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
 
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?

4 கருத்துகள்:

  1. நன்றி ஐயா. என் வலைப்பூவில் பார்த்தபோது உங்கள் வலைப்பூவிலிருந்து ஒருவர் வருகை தந்தது தெரிய வந்தது. இங்கே வந்து பார்த்தால்.....
    நானும் இன்று காலையில் என் முகநூல் பக்கத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இப்படி ஏதாவது செய்துவிடுவீர்களோ என்று.... பயப்படவில்லை, எதிர்பார்த்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மிக உபயோகமான பதிவு. வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு